/indian-express-tamil/media/media_files/colors-tamil-sivakarth.jpg)
சிவசக்தி திருவிளையாடல்
தமிழில் சின்னத்திரை சீரியல்களை எடுத்துக்கொண்டால் அதில் விஜய் டிவி மற்றும் சன்டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த இரு சேனல்களில் சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் விஜய் டிவி நகர்புற ரசிகர்கள் மத்தியிலும், சன்டிவி சீரியல்கள் கிராமபுரங்களில் உள்ள ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த இரு சேனல்களுக்கு இணையாக அதிகமாக சீரியல்களை ஒளிபரப்பி வருவது ஜீ தமிழ். ஆனால் ஜீ தமிழ் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெற்று வந்தாலும், அதற்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த வகையில் ஜீ தமிழுடன் புதிதாக சீரியல் ஒளிபரப்பை தொடங்கிய சேனல் தான் கலர்ஸ் தமிழ். தொடக்கத்தில் இந்தி மற்றும் பெங்காலி டப்பிங் சீரியலை ஒளிரப்பி வந்தது.
அதன்பிறகு திருமணம், பேரழகி, அபி டெய்லர் வள்ளி திருமணம் உள்ளிட்ட நேரடி சீரியல்களை ஒளிபரப்பியது. குறிப்பாக திருமணம், இதயத்தை திருடாதே, இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் சமீப காலமாக நேரடி சீரியல்கள் இல்லாமல் மீண்டும் ஜீ தமிழ் டப்பிங் சீரியலை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. டப்பிங் சீரியலில் பொம்மி பி.ஏ.பி.எல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
அந்த வகையில் தற்போது சிவ சக்தி திருவிளையாடல் சீரியல் புதிதாக ஒளிபரப்பா உள்ளது.சிவன் மற்றும் சக்தியின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், சிவன் மற்றும் சக்தியின் காதல், கடமை, தியாகம் ஆகியவற்றுடன் முக்கியமாக ஒருவரையொருவர் மாற்றுவதற்கான அவர்களின் முயற்சிகள் மற்றும் கொண்டாட்டங்களின் வியத்தகு பயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த கணவன் என்று சொல்லும்போது சிவனையே நினைவுபடுத்துவது ஏன் என்ற கேள்விகளுக்கு இந்தத் தொடர் விடையளிக்கும். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சிவ சக்தி திருவிளையாடல் ஆன்மீக தொடர், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.