கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஹீமா பிந்து . இந்த தொடரில் சஹானா என்கிற கேரக்டரில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகத் திருமணம் எனும் பெயரில் பகடைக்காயாக்கப்படும் இருவரின் கதை தான் இதயத்தை திருடாதே. இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சென்னையில் வசித்து வரும் பிந்துவுக்கு பூர்வீகம் ஆந்திராதான். கல்லூரி படிப்பை முடித்த பின் ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார். ஹீமாவுக்கு பொட்டிக் ஷாப் திறக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பிந்துவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”