கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஆராவாரமாகவும் பிரமாண்டமாகவும் ஒளிபரப்பாகி வரும் ஆண்மீக சீரியல், சிவசக்தி திருவிளையாடல். சுவாரஸ்யமான திரைக்கதையோடு ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்தத் தொடர், ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக ஒளிப்பாகி வருகிறது.
சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில் திடீர் திருப்பங்கள், பாரதத் தேசத்தின் ஆன்மிகப் புராணச் செய்திகள் அனைத்தும் சேர்த்து விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூட்டியிருக்கிறது. சிவன் – ஆதிபராசக்தி இருவரும் இணைந்த ஆனந்த தாண்டவத்தில் அண்டசராசரங்களும், அனைத்து உயிர்களும் உருவாகின்றன. எல்லாவற்றுக்குள்ளும் ஆதி ஊற்றாக சிவன் இருக்கிறார். பிறகொரு காலத்தில் பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி.
சிவன் தனியனாகிறார். போதாதற்கு நாராயணின் தீவிரப் பக்தன் பிரஜாபதி தட்சண், சிவனை எதிரியாகப் பார்க்கிறார். ஆனால், தட்சண் மகள் தாட்சாயிணியோ பருவ வயது எட்டியதும் சிவன் மீது காதல் கொள்கிறாள். `மணந்தால் மகாதேவன். இல்லையேல் கன்னிக்கோலம்` என்கிறாள். `மயானத்தில் சாம்பல் பூசித் திரியும் அகோரி சிவன், எனக்கு மருமகன் ஆவாதா? நான் மகாராஜன்; சிவன் மயானபதி. அவன் என் மகளை மணக்க முடியாது. எனக்கு மருமகனும் ஆக முடியாது` என தட்சன் கடுமையாக எதிர்க்கிறார்.
சிவன் மீதான விரோத்தத்தை இன்னும் ஆழமாக வளர்க்கிறார். ஆனால், பிரபஞ்சக் கணக்கு வேறு. சிவனும் ஆதிபராசக்தியின் மனித அவதாரமான தாட்சாயிணியும் இணைவதே படைப்பு நியதி என மும்மூர்த்திகளான பிரம்மன், நாராயணன் உள்பட அனைத்துச் சக்திகளும் விரும்புகின்றன. சிவன் – தாட்சாயிணி இருவரின் காதலைப் பிரிக்க சுயம்வரம் ஏற்பாடு செய்கிறார் தட்சண். நிபந்தனையோடு ஒப்புக்கொள்கிறாள் தாட்சாயிணி. இறுதியில் சிவனை மணாளனாகத் தேர்ந்தெடுக்கிறாள் தாட்சாயிணி. அவமானத்தில் தவிக்கிறார் தட்சண். மனசுக்கேத்த மணாளனாக மகேஸ்வரனே கிடைத்ததில் மகிழ்கிறாள் தாட்சாயிணி.
சிவசக்தி திருவிளையாடல் தொடரின் இந்த வாரம் இறுதியில், மூவுலகும் கொண்டாடும் சிவன் - தாட்சாயிணி திருமணம் அரங்கேறுகிறது. பிரம்மன் முன்னின்று திருமணத்தை நடத்திவைக்க, நாராயணன் சாட்சியாகிறார். கோலகலமாக நடந்தேறிய திருமணத்தால் மூவுலகும் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இல்வாழ்க்கையில் இணைகின்றனர் பிரபஞ்சத்தின் ஆதார சக்திகளான சிவனும் ஆதிப்பராசக்தியும். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழப்போகிறது. இதன் மூலம் பூமியில் சக்திப் பீடங்கள் உருவாகப் போகின்றன.
வீரபத்திரர் வழிப்பாடு தோன்றப் போகிறது. பார்வதி தேவியாக அவதரித்து சிவனை நோக்கி தவமிருந்து அவரை மணக்கப்போகிறாள் ஆதிபராசக்தி. இதற்கிடையில் அசுரர் – தேவர் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம், தங்களுக்குக் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற கோபத்தில் தேவர்களோடு மோதப்போகிறார்கள் அசுரர்கள். இவையெல்லாம் ஆதி – அந்தமில்லா சிவனின் திருவிளையாடல்களே. இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக சிவசக்தி திருவிளையாடல் தொடரில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“