சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களுக்கு இணையாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் சேனலில் புதிய முயற்சியாக ஜமீலா என்ற சீரியல் ஔபரப்பாக உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பல இளைஞர்கள் மத்தியிலும் சீரியல் தவிர்க்க முடியாத ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. சீரியல் என்றாலே அதை பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி தற்போது அனைவரும் பார்க்கும் பொழுதுபோக்காக உள்ளது.
இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்களை அரங்கேற்றி வருகிறது. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் என ரசிகர்களை பரபரப்பின் உச்சத்தில் வைத்திருப்பதில் சின்னத்திரைக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் தான் ஒரு சீரியல் முடிவு பெற்றால் அடுத்து சில நாட்களில் மற்றொரு புதிய சீரியல் ஒளிபரப்பை தொடங்கிவிடும்.
அந்த வகையில் கலர்ஸ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஜாமீலா. இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 11 வினாடிகள் ஓடும் இந்த ப்ரேமோவில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்தபடி நின்றுகொண்டிருக்கிறார். அவரின் கண்கள் மட்டுமே தெரிகிறது. இதனால் இந்த ப்ரமோவே பலத்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லாம்.
இந்த சீரியல் வரும் ஆகஸ்ட் 22-முதல் கலர்ஸ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது தமிழில் உள்ள அனைத்து சேனல்களையும சேர்த்து நுற்றுக்கு மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இஸ்லாமியத்தை பேசும் முதல் சீரியல் இதுவாகத்தான் இருக்கும். கலர்ஸ் தமிழின் இந்த புதிய முயற்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் ஜமீலா கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலின்டைட்டில் கூட அரபு மொழி ஸ்டைலில் அமைந்துள்ளதால், கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டன.கலர்ஸ் தமிழல் ஏற்கனவே அபி டெய்லர், ஜில்லுனு ஒரு காதல், இதயத்தை திருடாதே, வள்ளி திருமணம், அம்மன், கண்டநாள் முதல் உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஜமீலா சீரியலும், அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“