முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் வள்ளி மற்றும் கார்த்திக்கின் திருமணத்தை கோலாகலமாக ரசிகர்கள் முன்னிலையில்’ நடத்தியுள்ளனர்.
ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நக்ஷத்திரா. தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் ஷ்யாம் நடித்து வருகிறார். அடாவடி பெண்ணாக சுற்றி வரும் வள்ளியை காதலிக்கும் கார்த்திக் பல பிரச்சினைகள் காரணமாக பிரிந்துவிடுகிறார்.
இவர்களின் காதலை தெரிந்’துகொண்ட கார்த்திக்கின் அக்கா வள்ளியை கோகுலுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கார்த்தி்ககை விரும்பும் வள்ளி இந்த திருமணத்திற்கு மறுக்க கார்த்திக்கும் வள்ளியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆனாலும் வள்ளிக்கு கோகுலுடன் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
இதனால் வள்ளிக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்க்கு அதிகரித்த நிலையில். கடந்த ஒரு வாரமாக வள்ளி திருமணம் தொடர்பான எபிசோடுகள் கலைகட்டிய நிலையில்.இந்த திருமண விழாவை மக்களோடு மக்களாக கொண்டாடும் வகையில் திண்டுக்கல் நகரில் சீரியல் நட்சத்திரபட்டாளத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் வள்ளி கார்த்திக் திருமணம் முடிந்ததைதொடர்ந்து. வரவேற்பு நிகழ்ச்சி ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் சீரியல் குழுவுடன் சேர்த்து சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வள்ளியை திருமணம் செய்துகொள்ள மறுத்த கார்த்திக் தற்போது வள்ளியையே திருமணம் செய்துகொண்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே சமயம் நிஜ திருமணத்தை போல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம் என பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் அரங்கேறியது மேலும் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துவதற்காக வழங்கப்படும் பாரம்பரியமான மஞ்சள் பத்திரிகை திண்டுக்கல் நகர் முழுவதும் உள்ள மக்கள் அணைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.
நடிகை ஃபரீனாவும், விஜே. அன்சரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த சீரியல் நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பல நடிகர் நடிகைகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வள்ளி திருமணம் தொடரின் குடும்பத்தினரோடு இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து நட்சத்திரங்களும் ஒன்று சேர்ந்து நடனமாடி, தாங்கள் மகிழ்ந்ததோடு, பார்வையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தி இந்நிகழ்வை நிறைவு செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil