scorecardresearch

Comali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’! – சாதித்த கோமாளி டீம்

Comali Review, Comali Audience Response: ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் கோமாளி படத்திற்கு முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன

Comali Movie TamilRockers, Comali Tamil Movie, கோமாளி, தமிழ் ராக்கர்ஸ், Comali Movie Jeyam Ravi
Comali Movie In TamilRockers

Jayam Ravi’s Comali Review: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி திரைப்படம் சுதந்திர தினமான இன்று உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ் நடிகர்களில் ‘டாப் 6’ வசூல் நாயகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவிக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். அவர்தான் இப்படத்தின் ஹீரோ என்பதே, இப்படம் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். ஆனால், டிரைலரில் வெளியான ‘ரஜினி அரசியல் என்ட்ரி’ கிண்டல் சமாச்சாரத்தால், ரஜினி ரசிகர்கள் மற்றும் கமலின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட, சற்று கூடுதல் கவனம் கோமாளி படத்துக்கு கிடைத்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, டிரைலர் வெகுவாக கவர்ந்ததால், ‘படத்தை பார்க்கணும்டா’ மோடில் ரசிகர்கள் இருந்தனர்.

இவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியான கோமாளி படத்திற்கு, கொஞ்சமும் சறுக்காமல் ஹைலி பாசிட்டிவ் விமர்சனம் வந்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் முதல் ஷோ பார்த்து வரும் ரசிகர்கள், படம் காமெடி + செண்டிமெண்ட் என்ற சரிவிகித கலவையில் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன.

நேர்மறையான விமர்சனங்களால் இந்த வீக்கெண்ட் கோமாளிகளின் வீக்கெண்டாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை!.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Comali review jayam ravi comali film review pradeep ranganathan

Best of Express