தமிழ் திரையுலகில் நடிகர் செந்தில் போல் தோற்றம் கொண்டவர் ஜெயமணி. இவர் தனது நண்பர் மாரிமுத்து உடன் அக்.18ஆம் தேதி புதன்கிழமை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் சென்றுள்ளார்.
அப்போது அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மாஜிஸ்திரேட் திருமால் என்பவரை ஜெயமணி தகாத வார்த்தைகளா்ல திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாஜிஸ்திரேட் திருமால் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயமணி மீது ஆபாசமாக திட்டுதல், மிரட்டல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்த நிறுத்ததல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று (அக்.20) ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோரை கிண்டி போலீசார் இன்று அதிரடியாக கைதுசெய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ஜெயமணி வானத்தை போல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“