இயக்குனர், இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மகன் பிரேம்குமார். இவர் 1979 பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ( லீப் ஆண்டு) பிறந்தார். இவரும் தந்தையைப் போல் சினிமாவில் பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடிகர், காமெடியன் என பன்முக திறமை கொண்டவராக வலம்வருகிறார்.
ரசிகர்களால் பிரேம்ஜி என அழைக்கப்படும் இவர், ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேம்ஜிக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பு மிக்க ஆண்டாகும். ஏனெனில் இந்த ஆண்டு லீப் வருடமாகும். பிரேம்ஜி புன்னகை பூவே, விசில், கண்ட நாள் முதல், வல்லவன், சென்னை 600028, சத்தம் போடாதே, தோழா, சந்தோஷ் சுப்பிரமணியம், சத்தியம், சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் மங்காத்தா, சிலம்பாட்டம் மற்றும் கோவா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. மங்காத்தா படத்தில் நடித்ததற்காக இவர் எடிசன் அவார்ட் ஃபார் பெஸ்ட் காமெடியன் விருதும் வென்றுள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் பிரேம்ஜி நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“