tamil-cinema | வளர்ந்துவரும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/eRzqAxTh8OoxUsdRRFAl.png)
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி வசனங்கள், நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. அடுத்து ரஜனிகாந்த் உடன் அண்ணாத்த, விஜய் உடன் பீஸ்ட் என பிஸியானார்.
இந்த நிலையில் சின்னத் திரை நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி இன்று கரம் பிடித்தார். இந்தத் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது.
இதில் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“