comedian senthil birthday best comedies of Actor Senthil, best comedies of Actor Senthil along with actor Goundamani
comedian senthil birthday best comedies of Actor Senthil : இன்று நடிகர் செந்தில் அவர்களின் பிறந்தநாள். 90ஸ் கிட்ஸ்களின் இன்றைய காலத்து யூ.டியூப் பொழுதுபோக்கே இவரும் கவுண்டமணி சாரும் தான். இவரும் திரையில் தோன்றினால் சிரிக்காமல் ஒரு பொழுதும் இருந்துவிட முடியாது. கொரோனா நோய் பரவலை தடுக்க அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருக்கின்றோம். மன அழுத்தம் என்ன என்பதை சொல்லி மாளாது.
சிரிக்கவும், சிந்திக்கவும் இந்த காலத்தை நாம் எடுத்துக் கொள்வோம். செந்திலின் பிறந்த நாளான்று அவரின் வீடியோக்களை பார்த்து சிரித்து மகிழ்ந்திருப்போம். நாம் மகிழ்ச்சியாக இருக்கவே அவர் திரைகளில் கவுண்டமணியிடம் அடி வாங்கிக் கொண்டே இருந்தார். மகிழ்ந்து ரசியுங்கள். மகிழ்ச்சியுடன் கொரோனாவை வெளுத்து வாங்குவோம்.
Comedian senthil birthday best comedies of Actor Senthil
Advertisment
Advertisement
கவுண்டமணி - செந்தில் ஜோடிகளுக்கு பிறகு எத்தனையோ போர் தமிழ் திரையுலகை அலங்கரித்தாலும், இந்த இருவரும் ஏற்படுத்திய வெற்றிடம் நிரப்பப்படாமலே தான் இருக்கிறது.
சின்ன கவுண்டர், எஜமான், நாட்டாமை உள்ளத்தை அள்ளித்தா, ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் இவர்களின் நடிப்பிற்காகவே கே-டிவியில் நாற்காலி தோய்த்தவர்கள் எத்தனையோ பேர்.
இவருடைய பிறந்த நாள் அன்று நாமும் இந்த காட்சிகளை ரசித்து பார்த்து, மகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்க்கையை செந்தில் வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
கப்ளிங், டிக்கிலோனா போன்ற விளையாட்டை தமிழகத்துக்கே அறிமுகம் செய்த பெருமையெல்லாம் அண்ணன் செந்திலையே சாரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”