comedian vadivelu web series thalaivan irukkiran kamalhaasan - சினிமா? வெப் சீரிஸா? - வைகைப்புயல் வடிவேலு முடிவு என்ன?
'வெப் சீரிஸ்' என்பது இன்றைய நடிகர், நடிகைகளின் சீரியலுக்கு மாற்றான களமாக உருவாகியுள்ளது. சீரியலில் நடித்தால், மார்க்கெட் போச்சு என்று கேலி, கிண்டலை தவிர்க்க சினிமா கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகவே வெப் சீரிஸ் பார்க்கப்படுகிறது.
Advertisment
அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் பிரிமியம், நெட் ஃபிலிக்ஸ், யூட்யூப் ஒரிஜினல் போன்ற பல நிறுவனங்கள் வெப் சீரிஸ்களை தயாரிக்கின்றன.
இந்த நிறுவனங்களின் ஆப்-களை டவுன் லோட் செய்து பார்ப்பதில் 99 சதவிகிதத்தினர் இளசுகள் மட்டுமே. இவர்களை கணக்குப் போட்டுத் தான், இணைய தள நிறுவனங்கள் வெப் சீரிஸ் என்று பெயர் வைத்து பிரபல நடிகர் நடிகைகளின் கால்ஷீட் வாங்கி வெப் சீரிஸ் இயக்கித் தருபவர்களுக்கு தயாரிப்பு செலவை ஏற்கின்றது.
Advertisment
Advertisements
இதனுடைய பிளஸ் பாயின்ட் என்னவெனில், மார்க்கெட் போனவர்கள் மட்டும் இதில் நடிப்பதில்லை... சினிமாவில் ஓரளவுக்கு நல்ல வருமானத்துடன் பிஸியாக நடிப்பவர்களும் வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்குகிறார்கள்.
ஏனெனெனில், ஒரு சீரிஸ்க்கு அதிகபட்சம் 10-15 எபிசோடுகள் மட்டுமே எடுக்கப்படும். அந்த 15 எபிசோடுகளுக்கு கிட்டத்தட்ட 600 - 700 எபிசோடுகள் கொண்ட டிவி சீரியலுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.
நம்ம இளம் தலைமுறை தான், ரூ.300, 400 என பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்து பார்க்கிறார்களே... பிறகு தர மாட்டார்களா என்ன..?
ஆனால், வெப் சீரிஸில் சென்சார் கிடையாது என்பதால், ஏகத்துக்கும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆண், பெண் பேதமின்றி சரமாரியாக கெட்ட வார்த்தைகளை சரளமாக பேசுகின்றனர்.
சரி விஷயத்துக்கு வருவோம்... மீடியாவிடம் இருந்து விலகியே இருக்கும் வைகைப்புயல் வடிவேல், சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு மட்டும் அளித்த பேட்டியில், தன்னை ஒரு வெப் சீரிஸ் நிறுவனம் அணுகியிருப்பதாகவும், அதில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, அது ஹாலிவுட் நிறுவனம் என்றும் வடிவேலு கூறியிருந்தார். ஆனால், அவர் சொல்லி கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் அறிவிப்புகள் ஏதும் வெளி வரவில்லை.
அதற்குள், கமல்ஹாசனுடன் 'தலைவன் இருக்கிறான்' படத்தில் வடிவேலு ஒப்பந்தம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், சமீபத்தில் நடந்த திரை உலகில் கமல்ஹாசனின் 60வது ஆண்டை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட விழாவில், வீட்டை விட்டு வெளியவே வராத வடிவேலு கலந்து கொண்டார். கலந்து கொண்டது மட்டுமின்றி, மேடையேறி, அவர் பேசிய 'தேவர் மகன்' பிளாஷ்பேக் இணையதளத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
'நான் மேல வந்துட்டன்டா' என்ற அவரது பட டயலாக் போலவே இருந்தது, அவரது வீடியோ வைரலானதை பார்த்த போது.
'தலைவன் இருக்கிறான்' தேவர் மகன் இரண்டாம் பாகம் என்று கூறப்படுவதால், அப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த வடிவேலு, லேட்டஸ்ட் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகிய நிலையில், கமல் விழாவில் அந்நிகழ்வு உறுதி செய்யப்பட்டது. கமல் தனது 'இந்தியன் 2' ஷூட்டிங்கை முடித்தவுடன் 'தலைவன் இருக்கிறான்' படத்தை தொடங்கவுள்ளார்.
ஆகையால், வடிவேல் மீண்டும் பெரிய திரையில் காலடி எடுத்து வைப்பார் என்றும், வெப் சீரிஸ் ஐடியா இப்போதைக்கு தள்ளிவைக்கப்படுவதாகவே கூறப்படுகிறது.