/tamil-ie/media/media_files/uploads/2019/10/cats.jpg)
Comedy Actor Krishnamoorthy passed away
Comedy Actor Krishnamoorthy passed away : வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் அவருக்கு சற்றும் தளராமல் காமெடியில் கவுண்ட்டர் கொடுக்கும் நகைச்சுவை நடிகர்களை கடந்த சில காலங்களாக நம்மால் காண இயலவில்லை. தவசி படத்தில் “எக்ஸ்யூஸ்மி, சாரி ஃபார் தி டிஸ்டெர்பென்ஸ், இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா” என்று கேட்கும் டிப்-டாப் மனிதனை நாம் என்றுமே மறக்க மாட்டோம். மறக்கவும் இயலாது.
அப்படியாக அவருடைய நடிப்பு, தோற்றம், உடல்மொழி, பாவனை என அனைத்தும் அமைந்திருக்கும். அவர் தான் நகைச்சுவரை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. வயது 55. கைவிட்டு எண்ணும் வகையில் படங்கள் நடத்திருந்தாலும் அவருடைய இந்த நகைச்சுவை போர்ஷன் என்றும் நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவை என்பதில் சந்தேகமே இல்லை.
இன்று காலை குமுளியின் வண்டிப்பெரியாறு பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்ட உடன் படபிடிப்பு தளத்தில் இருந்து படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக பணியில் சேர்ந்து பின்பு சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் நடிகர் வடிவேலுவின் உற்ற நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தவசி, நான், நான் கடவுள், ஆணை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க : ’பாம்பே’ பட தயாரிப்பாளர் ‘ஆலயம் ஸ்ரீராம்’ மாரடைப்பால் மரணம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.