சதீஷுக்கு டும் டும் டும்! – முதல்வர், துணை முதல்வருடன் சந்திப்பு!

EPS – OPS : திரையுலகினரையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் சதீஷ்.

Sathish Wedding
Sathish Wedding

Actor Sathish Wedding : ’எதிர் நீச்சல்’, ‘கத்தி’, ’தங்க மகன்’. ‘ரெமோ’ போன்ற  படங்களில் நடித்து, பார்வையாளர்களை தனது நடிப்பால் கவர்ந்தார் நகைச்சுவை நடிகர் சதீஷ். இறுதியாக இயக்குநர் சாச்சியின் ’சிக்ஸரில்’ முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைபவ் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் பல்லக் லால்வானி ஹீரோயினாக நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தனது திருமணத்திற்காக திரையுலகினரையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் சதீஷ்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் நேரில் சந்தித்து, தனது திருமண அழைப்பிதழை வழங்கியிருக்கிறார். தவிர, சதீஷுக்கு வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஜீவா.

இதற்கிடையே இயக்குநர் ரத்னா சிவாவின் ஆக்‌ஷன் திரைப்படமான ’சீரு’, த்ரிஷா மற்றும் சிம்ரன் நடிக்கும் ’சுகர்’, இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜனின் ’டெடி’ ஆகியப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் சதீஷ்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Comedy actor sathish wedding cm edappadi palaniswamy ops

Next Story
சர்வதேச திரைப்பட விழா: ஐகானிக் சூப்பர் ஸ்டார்…. பிக்பாஸ் அமிதாப் ஜி! ஸ்பெஷல் புகைப்படங்கள்IFFI 2019 opening ceremony: Rajinikanth, Amitabh Bachchan special photos - சர்வதேச திரைப்பட விழா: ஐகானிக் சூப்பர் ஸ்டார்.... பிக்பாஸ் அமிதாப் ஜி! ஸ்பெஷல் புகைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com