பகவதி படத்தில் இன்னொரு வடிவேலுவா நடிக்க வேண்டியது நான் தான். வடிவேலுவால் எனக்கு நிறைய படம் போச்சு என நகைச்சுவை நடிகர் சிசர் மனோகர் கூறியுள்ளார்.
இந்தியாகிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் நகைச்சுவை நடிகர் சிசர் மனோகர் உடன் உரையாடினார். அந்த வீடியோவில், சிசர் மனோகர் தயாரிப்பு குழுவில் இருந்தார் என்றும், அங்கு உணவு பரிமாறுவது முதல் அனைத்து வேலைகளையும் செய்தவர் என்று அவரை அறிமுகப்படுத்துகிறார் பயில்வான்.
இதையும் படியுங்கள்: ஆஸ்கர் உரையை ‘சிலர் மதத்துடன் பொருத்தி தவறாகப் புரிந்து கொண்டனர், அது உண்மையல்ல’ – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
பின்னர் வடிவேலு பெரிய நடிகர் ஆன பின், பழைய நடிகர்களுக்கு வாய்ப்பு தர மறுத்துட்டார், உங்க அனுபவம் எப்படி என பயில்வான் கேட்டார். அதற்கு ராஜ்கிரண் புரடக்சன் கம்பெனியில் என் கூட தான் இருந்தாரு, வேலை பார்த்தாரு. ராஜ்கிரண் பட சூட்டிங்கில் வடிவேலு காமெடி செய்ததை பார்த்து, கவுண்டமணி யாருனு கேட்டார். நான் அவரிடம் வடிவேலுனு ஒரு மதுரைக்கார பய என்று சொல்லி, அடுத்த சீனில் நீங்க அவர தூக்கி போட்டு அடிக்கணும் என்று சொன்னேன்.
உடனே கவுண்டமணி என்னிடம் ராஜ்கிரனை கூப்பிடு என்று சொல்லி, தேனாம்பேட்டையில் நிறைய பேர் நடிக்க காத்துக்கிட்டு இருக்கான், நீங்க மதுரையில் இருந்து கூட்டி வந்த நடிக்க வைப்பிங்களா என கோபப்பட்டார். நான் தான் சமாதனபடுத்தினேன். அடுத்த சீனோட அவனை அனுப்பி விடணும் என்று சொல்லி, சீன் படமாக்கப்பட்டப்போது, நடிக்க வருவியா என நெஞ்சிலே மிதித்தார். வடிவேலு வந்த என்னிடம், நெஞ்சிலே மிதிட்டாரு சொன்னப்பா, நீ நிச்சயம் பெரிய ஆளா வந்துருவ என்று நான் சொன்னேன். ஆனா பாருங்க எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். பகவதி படத்தில் இன்னொரு வடிவேலுவா நடிக்க வேண்டியது நான் தான். வடிவேலுவால் எனக்கு நிறைய படம் போச்சு. வடிவேலுக்கு ஆரம்பத்தில் நடிக்க கத்துக் கொடுத்ததே நான் தான்.
அவரு நல்லா தான் இருக்காரு, ஏன் அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடுறாருனு தெரியல. பகவதி படத்தின்போது கடும் கோபத்தில் இருந்தேன். சீமான் மட்டும் இல்லைனா வடிவேலுவ முடிச்சிருப்பேன், எனக்கு 3 பெண் பிள்ளைகள் இருப்பதால் பொறுமையா இருந்தேன். நம்ம வளர்த்த ஆளு, நாம தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தோம், ஆனா நமக்கே வாய்ப்பு கிடைக்காம பண்ணா எனக்கு எப்படி இருக்கும். சீமான் என்ன சமாதானப்படுத்துனாரு. நான் எனக்கு வர்ற படங்கள வடிவேலு கெடுக்க வேணாம்னு சொல்லச் சொன்னேன். பல வருசம் படமே நடிக்கல.
கடைசியா இம்சை அரசன் படத்தில் சிம்புதேவன் தான் ஒண்ணா நடிக்க காரணமா இருந்தாரு. அந்தப் படத்திலும் எனக்கு இருந்த நிறைய சீன்களை கட் பண்ணியவர் வடிவேலு தான். நான் அடுத்தக்கட்டத்துக்கு போயிரக் கூடாது என்றே வேலை பார்த்துருக்காரு.
நடிகர் மயில்சாமி ஹோட்டலில் வேலை பார்த்தப்போது, நாங்க சாப்பிட்ட பில்லுக்கு காசு வாங்கல, அதன் மூலம் கன்னிராசி படத்தில் நடிச்சாரு. மயில்சாமி மக்களுக்காக நிறைய நல்லது பண்ணிருக்காரு. சம்பளத்த வீட்டில் கொடுக்காம மக்களுக்கு நல்லது பண்ணியவர் மயில்சாமி. இவ்வாறு நிறைய தகவல்களை சிசர் மனோகர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil