’எனக்கு ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் தெரியாது’ : செந்தில் விளக்கம்

69 வயதாகும் இவர், தனது ட்விட்டர் எண்ட்ரி குறித்து, அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

By: Updated: May 6, 2020, 05:46:17 PM

1980-ல் தொடங்கி தனது காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருப்பவர் நடிகர் செந்தில். நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து, இவர் செய்த காமெடிகள் தமிழ் சினிமாவின் எவர்கிரீன், நகைச்சுவை காட்சிகளாக ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் இடம் பிடித்துள்ளது. செந்தில் கவுண்டமணி என்றாலே பல நகைச்சுவை காட்சிகள் நம் முன்னே தோன்றும். பெரும்பாலும் கவுண்டமணியிடம், அடி வாங்குவது, திட்டு வாங்குவது போலத்தான் செந்திலின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ரசிகர்களும் இதனை வெகுவாக ரசித்தார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.

அம்மா சேலையை ‘சுட்ட’ மகள்: குஷ்புவின் ‘பெருமை மிகு தருணம்’

13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில், ஒரு எண்ணை கடையில் வேலை பார்த்தார். அதன் பின்னர் டாஸ்மாக்கில், வெயிட்டராக இருந்தார். இதனைத் தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தனது திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார். இது ஒருபுறமிருக்க, செந்தில் ட்விட்டரில் இணைந்திருப்பதாக செய்தி வெளியானது. அந்த புரொஃபைலை மேலே இணைத்துள்ளோம்.

கொரோனா முடக்கம்: விவசாயத்தில் இறங்கிய இளம் தமிழ் நடிகை

இந்நிலையில், தனக்கு பத்திரிக்கை, டிவி தவிர வேறொன்றும் தெரியாது என்றும், ஃபேஸ்புக், ட்விட்டரைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்ட, தன் பேரில் உருவாகியுள்ள போலி அக்கவுண்டுக்கு விளக்கமளித்திருக்கிறார் செந்தில்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Comedy actor senthil joins twitter cover picture with goundamani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X