Advertisment

வைகைப்புயலுக்கு 62-வது பிறந்த நாள் : காமெடி கிங் கொடுத்த கலக்கல் ஃபர்பாமன்ஸ்

1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமாகி பின்னாளில் காமெடி ஜாம்பவானாக உருவெடுத்தவர்தான் வடிவேலு.

author-image
WebDesk
New Update
Actor Vadivelu darshan at Tiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் வடிவேலு இன்று (செப்டம்பர் 12) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமாகி பின்னாளில் காமெடி ஜாம்பவானாக உருவெடுத்தவர்தான் வடிவேலு. தொடர்ந்து விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன், தொடங்கி தற்போது உள்ள முன்னணி அஜித் விஜய், விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்ளுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்ற அடையாளத்துடன் வலம் வரும் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி, எலி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். நடுவில் இம்சை அரசன் படத்தில் 2-ம் பாகத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தால் தடை விதிக்கப்பட்ட வடிவேலு இடையில் சில ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாவும். லாரன்சுடன் சந்திரமுகி 2, உதயநிதியுடன் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடும் வடிவேலு நடிப்பில் வெளியான சில மறகக முடியாத சில காமெடி படங்கள் இடம்பெற்ற படங்கள் பார்ப்போம்.

சந்திரமுகி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 திரைப்படம் சந்திரமுகி. திகில் படமாக வெளியான இந்த படத்தில் வடிவேலு முருகேசன் என்ற கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். வணிகரீதியாக வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தில்  வடிவேலுவின் காமெடி காட்சிகள்  வெகுஜன மற்றும் விமர்சகர்களிடமிருந்தும் அமோகமான வரவேற்பை பெற்றது.

போக்கிரி

பிரபுதேவா இயக்கிய தமிழ் அதிரடித் திரைப்படம் போக்கிரி. விஜய் நாயகான நடிதத்த இப்படத்தில் அசின், பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காமெடி காட்சியில் வடிவேலு கான் குங்-ஃபூ மாஸ்டராக நடித்து காமெடியில் முத்திரை பதித்த நிலையில். ரசிகர்கள் பலரும் அவரது காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

திமிரு

விஷால் தமிழ் சினிமாவில் நடித்த 3-வது படமான திமிரு படத்தில் ஹாஸ்டல் வார்டனாக வடிவேலு நடித்திருந்தார். தருண் கோபி இயக்கத்தில், வெளியான இந்த படத்தில் ஸ்ரீயா ரெட்டி, ரீமா சென், விநாயகன், கிரண் ரத்தோட் மற்றும் மனோஜ் கே ஜெயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சச்சின்

தமிழ் காதல்-காமெடி திரைப்படமான சச்சின் 2005 ஆம் ஆண்டு வெளியானது. வடிவேலு, சந்தானம், விஜய் மற்றும் ஜெனிலியா டிசோசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், 9 ஆண்டுகளாக கல்லூரியில் படித்து வரும் அய்யாசாமி என்ற அர்னால்ட் கேரக்டரில் வடிவேலு கல்லூரி மாணவராகவே மாறியிருப்பார். மேலும் மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்களை மதிக்க வேண்டும் என்று அவர் கூறும் காட்சிகள் காமெடியின் உச்சமாக இருந்தது

ஆதவன்

2009 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி-நகைச்சுவைத் திரைப்படம் ஆதவன். சூர்யா, நயன்தாரா, வடிவேலு மற்றும் சரோஜாதேவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் பானர்ஜி என்ற நீதிபதியின் உதவியாளராக வடிவேலு தனது நகைச்சுவை மூலம் பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்தார்.

வின்னர்

பிரசாந்த் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் வின்னர். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் கைப்புள்ள என்ற கேரக்டரில் நடித்த வடிவேலு தனது காமெடியில் வித்தியாசமாக பரிமானத்தை கொடுத்திருப்பார். மேலும் தற்போது வெளியாகி வரும் மீம்ஸ்கள் இந்த கைப்புள்ள என்ற பெயர் இல்லாமல் வெளியாவதில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஃப்ரண்ட்ஸ்

விஜய் சூர்யா இணைந்த நடித்த ஃப்ரண்ட்ஸ் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு வடிவேலு ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.. காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் வரும் வடிவேலு சொல்லும் ஒவ்வொரு வசனம் மற்றும் ஒன்லைனர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் எம்.மகன்,  சில்லுனு ஒரு காதல், மருதமலை உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் முத்திரை பதித்துள்ள வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இடைப்பட்ட ஆண்டுகளில் மீம்ஸ்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இணைப்பில் இருந்தார் என்று கூறலாம். அதேபோல் மீம்ஸ்கள்  ட்ரெண்டாக காலகட்டம் முதல் வடிவேலு ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment