Advertisment

விஜய் டிவி புதிய ஷோ… செம க்யூட் சீரியல் நடிகைகளை ஜோடியாக்கிய காமெடியன்கள்!

Vijay tv’s news show comedy raja kalakkal rani contestents revealed Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'காமெடி ராஜா கலக்கல் ராணி' என்ற புத்தம் புதிய நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Comedy Raja Kalakkal Rani Tamil News: vijay tv’s news show comedy raja kalakkal rani contestents reveale

Comedy Raja Kalakkal Rani Tamil News: ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லாத சின்னத்திரையில் புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வதில் கில்லாடியாக வலம் வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் விஜய் டிவி 'காமெடி ராஜா கலக்கல் ராணி' என்ற புது ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் ஒளிபரப்பும் நாள் மற்றும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

இதன் படி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தான் இந்த நிகழ்ச்சியின் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோவில் விஜய் டிவி காமெடியன்கள் அழகிய சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து காமெடி செய்வது போன்று கன்செப்ட்டில் இருந்தது. எனவே காமெடிக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என நம்பலாம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில் குக் வித் கோமாளி புகழும் போட்டியாளராக களமிறங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மதுரை முத்து, பாபா பாஸ்கர், நடிகை ஐஷ்வர்யா ஆகியோர் வர உள்ளனர்.

இந்த 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ…

ராஜு (நாம் இருவர் நமக்கு இருவர் 2) - நிஷா

புகழ் - அர்ச்சனா (ராஜா ராணி 2)

ராமர் - தீபா

பாலா - ரித்திகா

யோகி - ஷப்னம்

தர்ஷா குப்தா - ராஜ வேலு

சுனிதா - டிஎஸ்கே

வினோத் பாபு - பிரனிகா

சதீஷ் - காயத்ரி

ஜெயச்சந்திரன் - அர்ச்சனா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“.

Vijay Tv Tamil Reality Show Tv Show Star Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment