சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார்

மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Suriya Soorarai Pottru, actor surya

சூரரைப் போற்று

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

குழந்தை நட்சத்திரம் டூ முன்னணி நடிகை: மீனாவின் சிறந்த படங்கள்!

அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, “மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு” எனத் தொடங்கும் பாடலில், "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை சூரரைப்போற்று படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கார்த்திக். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் 7.5% இட ஒதுக்கீடு

இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema Surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: