தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வில், முஸ்லீம்களை அவமதித்தாக நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இப்தார் நிழ்கவு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Complaint filed against Vijay for discrepancies at Iftar event
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தற்போது 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ள விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில்’, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ரமலான் இப்தார் நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பங்கேற்ற விஜய், முஸ்லீம்கள் போன்று தலையில் தொப்பி அணிந்திருந்தார். இந்த நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்த நிகழ்வில், 'முஸ்லிம்களை அவமதித்ததாக' தமிழ்நாடு சுன்னத் ஜமாத் விஜய் மீது புகார் அளித்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. புகார் அளித்ததற்கான காரணத்தை விளக்கிய அந்த அமைப்பைச் சேர்ந்த சையத் கௌஸ், "இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் குடிகாரர்கள் மற்றும் குண்டர்கள் என்பதால் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர்.
அத்தகைய மக்கள் புனித நிகழ்வில் கலந்து கொள்வது ரமலான் விதிகளை மத ரீதியாகப் பின்பற்றும் முஸ்லிம்களை அவமதிப்பதாகும். நிகழ்வில் ஏற்பட்ட சிரமங்களுக்கு விஜய் மன்னிப்பு கூட கேட்காதது வெட்கக்கேடானது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் இத்தகைய முரண்பாடுகள் இருந்ததாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் வாதிட்டது. மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை, கால்நடைகளாக நடத்தப்படுகிறார்கள், அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை. கூடுதலாக, நிகழ்வுக்கு வந்த மக்களை மதிக்காத பவுன்சர்கள் அவர்களிடம் உள்ளனர்.
எனவே, விஜய்யைச் சுற்றியுள்ள நிகழ்வுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாங்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். மிக முக்கியமாக, நாங்கள் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், ”என்று கூறியுள்ளார்.
விஜய் 2024 இல் தீவிர அரசியலில் நுழைவதாக அறிவித்த விஜய், தமிழக மக்களிடையே தனது கட்சியின் நற்சான்றிதழ்களை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ள விஜய், இந்த படத்தை முடித்துவிட்டு தனது அரசியல் வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.