/tamil-ie/media/media_files/uploads/2021/11/Annaatthe-teaser-1200.jpg)
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்கவும் வழக்கு செலவுகள் மற்றும் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த தொகையை நுகர்வொருக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்திற்கு சென்னை திரையரங்கம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக, அந்த திரையரங்கம் டிக்கெட் கட்டணத்தை விட 75 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்கவும் வழக்கு செலவுகள் மற்றும் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த தொகையை நுகர்வொருக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் 2021-ம் ஆண்டு அண்ணாத்தே திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. இந்த படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார், மாமன் மகளாகவும் அத்தை மகளாகவும் நடிகைகள் குஷ்பு மற்றும் மீனாம் நடித்து இருந்தனர்.
அண்ணாத்தே திரைப்படம் வெளியானபோது, ஒரு சில இடங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில், சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் அண்ணாத்தே படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் அவருக்கு இழப்பீடும் அளிக்க சென்னை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, 2024-ல் அண்ணாத்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் நியூ இணையதளம் வாயிலாக டிக்கெட் புக் செய்துள்ளார். கேசினா தியேட்டரில் படம் பார்க்க இவர் டிக்கெட் புக் செய்து இருந்த நிலையில், அரசு நிர்ணையித்த கட்டணத்தை மீறி ரூ.159.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை வடக்கு மண்டல நுகர்வொர் குறை தீர்ப்பு ஆணையத்தில், தியேட்டரில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்ப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் நுகர்வொர் ஆணையத் தலைவர் விசாரித்தார். விசாரணையின் முடிவில், தியேட்டர் நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்து நுகர்வோர் விதிகளை மீறியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு தியேட்டர் நிர்வாகம் ரூ.12 ஆயிரம் இழப்பீடு அளிக்க வேண்டும். வழக்கு செலவுகள் மற்றும் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த தொகையை நுகர்வொருக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.