சென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் குறித்து வழக்கு தொடர ஸ்ரீரெட்டி சென்னை வருகிறார்.

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தெலுங்கு சினிமாவில் நடந்தது போலவே தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பல பிரபலங்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து வருகிறார்.

இந்தப் புகாரை அடுத்துக் கடந்த ஒரு வாரமாகத் தனது முகநூல் பக்கத்தில், பல தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார். ஒரு நாள் கூட இடைவேளை இல்லாமல் பலமாக வீசும் ஸ்ரீரெட்டி புயலில் இதுவரை இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் விஷால் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நேற்று இயக்குநர் மற்றும் நடிகர் சி. சுந்தர் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சென்னையில் கால் பதிக்க இருக்கும் ஸ்ரீரெட்டி Tamil Leaks:

ஸ்ரீரெட்டி நேற்று சி. சுந்தர் மீது வைத்திருந்த குற்றச்சாட்டில், “ஹைத்தரபாத்தில் நடந்த அரண்மனை படத்தின் ஷூட்டிங் நடந்த வேளையில் துணை தயாரிப்பாளர் கணேஷ் என்பவர் என் செல்போன் நம்பரை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். அவர் என்னைத் தொடர்பு கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரச் சொன்னார். அங்குச் சென்ற பிறகு என்னை சி. சுந்தர்விடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எனது முகநூல் நண்பர் செந்தில் குமாரை சந்தித்தேன். அவர் எனக்கு 200% தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார். பிறகு அவர் மற்றும் சுந்தர் சி இருவருடன் நான் அனுசரித்துப் போக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு எனக்கு எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை.” என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று புதிய வீடியோ பதிவு ஒன்றை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் அவர் சென்னைக்கு வர இருப்பதாகவும், சென்னையில் முக்கிய வேலை ஒன்று உள்ளது என்றும், தன்னைத் தமிழ் சினிமாவில் ஏமாற்றிய பல பிரபலங்கள் குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் சென்னை வருகையில் இவருக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தன்னை மிரட்டுவதாகவும், தான் தவறு இழைக்கவில்லை நியாயத்திற்காகப் போராடுகிறேன் எனவே எனக்கு எதிராக விஷால் நிற்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விரைவில் சென்னை நோக்கி ஸ்ரீரெட்டி பயணிக்க உள்ளார். ஹைதராபாத்தில் நடந்த போராட்டம் போலவே இங்கு வேறு வழியாக ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறாரா அல்லது போலீஸ் மற்றும் நடிகர் சங்கத்தினரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறாரா என்பது குறித்து விரைவில் தெரிய வரும். ஆனால், இவர் சென்னைக்கு வந்த பிறகு இன்னும் பல பெயர்கள் இந்த லிஸ்டில் வந்து விழும் என்பது உறுதி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close