விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ள நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள். முதல் சீசன் ஓரளவிற்கு வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
Advertisment
நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க ஒரு கூட்டமே உள்ளது. அதிலும் அஸ்வின் - சிவாங்கி ரீல் ஜோடிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல் சிவாங்கி புகழ் அண்ணன் தங்கை பாசமும் ரசிக்கும் படி இருக்கும்.இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமா சான்ஸ் கிடைத்துள்ளது. புகழ் தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படித்தில் நடித்து வருகிறார்.
தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனை முடிக்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். ரம்யா பாண்டியனுக்கு இரண்டாவது இடமும் நடிகை ரேகாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவது சீசனில் யார் வின்னர் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே ஏற்பட்டுள்ளது. பைனல்ஸ்க்கு பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகீலா, கனி, பவித்ரா என ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர்.குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஷ்வின் அல்லது கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
இதனிடையே அஷ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அஷ்வின் தான் வின்னர் தகவல் கசிந்துள்ளது. விரைவில் குக் வித் கோமாளி ஃபைனல் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"