New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/42in15iuHSO1l5qNANRi.jpg)
குக் வித் கோமாளி 6-வது சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள், கோமாளிகளாக யாரெல்லாம் கலக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
குக் வித் கோமாளி என்றாலே குதூகலமும், சுவையான சமையலும் நினைவுக்கு வரும். விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் குக் வித் கோமாளி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகராமாக முடித்நத்ளளது, சமையல் திறமை உள்ள போட்டியாளர்களையும், அவர்களைத் தங்கள் நகைச்சுவையால் திணறடிக்கும் கோமாளிகளையும் ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் இருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது சமையல் சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்திருக்கும். போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து சுவையான உணவுகளை சமைக்கப் போராடும்போது, கோமாளிகள் செய்யும் அட்டகாசங்கள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். முதல் 4 சீசனிகளில், செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 5-வது சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து செஃப் தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்தார்.
இதனிடையே வரும் மார்ச் 4-ந் தேதி தொடங்கும், குக் வித் கோமாளி 6-வது சீசனில், செஃப் தாமு, மாதம்பட்டி ரங்ராஜ் ஆகியோருடன், 3-வது நடுவராக கௌசிக் சங்கர் பங்கேற்க உள்ளார். இது தொடர்பான ப்ரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 6-வது சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள், கோமாளிகளாக யாரெல்லாம் கலக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த எதிர்பார்ப்புக்கு விடை சொல்லும் வகையில், தற்போது குக் வித் கோமாளி 6-வது சீசனுக்காக ப்ரமோ வெளியாகியுள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, மே 4ஆம் தேதி இரவு 8 மணிக்கு முதல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை சீரியல் கதாபாத்திரங்களில் இருந்து மாறி, சமையல் உடையில் பார்க்க அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த சீசனில், ரசிகர்களை உற்சாகப்படுத்த பல புதிய திருப்பங்களுடன், சில பழைய முகங்களும் களமிறங்குகின்றன. அதில் மிகவும் முக்கியமானவர், சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ஷபானா ஷாஜன். லட்சுமிராமகிருஷ்ணன், பிரியா ராமன் மற்றும் உமைர் இப்னு லத்தீப், நடிகர் கஞ்சா கருப்பு, பிக்பாஸ் ராஜூ ஆகியோரும் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். கோமாளிகளாக புகழ், சரத், ராமர், சுனிதா கோகோய் ஆகியோருடன் புதிய கோமாளிகளான சௌந்தர்யா நஞ்சுண்டன், சர்ஜின் குமார், பூவையார், டாலி மற்றும் குரைஷி ஆகியோரும் இணைந்து கலக்க உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.