அடுத்தடுத்து 3 படங்கள்… அஸ்வினுக்கு சப்போர்ட் விஜய் மேனேஜர்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நடிகர் விஜய்யின் மேனேஜர்தான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

cook with comali actor ashwin, actor ashwin gets chance to act 3 movies continuosly, traidant arts, குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி சீசன் 2, அஸ்வின், அஸ்வினுக்கு அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க வாய்ப்பு, விஜய் மேனேஜர், tamil cinema news, vijay manager, kollywood news, vijay tv, cook with comali season 2

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாவது ரன்னர் அப்-ஆக வந்தாலும் சினிமா வாய்ப்பு பெற்றதில் இவர்தான் வின்னர். அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யார் மூலம் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மேனேஜர்தான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், குக் வித் கோமாளி சீசன் 2 நடத்தப்பட்டது. முதல் சீசனை தாண்டி மிகவும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மேலும் பிரபலமானார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு சிங்கிள் டிராக்குகளில் நடித்து அறியப்பட்டிருந்த அஸ்வின் இதில் பங்கேற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். நிகழ்ச்சி முடிந்த மறுநாளே தான் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக அஸ்வின் வெளியிட்ட வீடியோ அவருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அதிலும், குக் வித் கோமாளி ஆஸ்தான காமெடியன் புகழ் உடன் இணைந்து அந்த படத்தில் நடிப்பதாக அஸ்வின் – புகழ் இருவருமே அந்த வீடியோவில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அஸ்வின் தான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்று தெரிவித்தார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் அஸ்வினை வைத்து ஒரு படம் தான் தயாரிக்கிறது என்று பார்த்தால் இப்போது, அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஸ்வினுக்கு ட்ரைடன்ட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தடுத்த 3 திரைப்பட வாய்ப்புகளும் தி ரூட் ஏஜென்சி மூலம்தான் கிடைத்துள்ளது. இந்த ஏஜென்சியை நடத்துவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மேனேஜர்தான் நடத்துகிறாராம். அஸ்வினுடைய திறமையைப் பார்த்து வியந்த விஜயின் மேனேஜர் அவரை புரமோட் செய்ய விரும்பியுள்ளார்.

பிரபலமான ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிகர் அஸ்வினுக்கு அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படங்களை முன்னணி இயக்குனர்கள் இயக்க உள்ளனர். அஸ்வின் நடிக்கும் 3 படங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவுப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali actor ashwin get chance to act 3 movies continuosly because of vijay manager

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com