காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள்: கனி கணவர் நெகிழ்ச்சிப் பதிவு

கனியின் கணவரும் இயக்குனருமான திரு, தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும்போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா?… காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

cook with comali, cook with comali title winner kani, director thiru, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, கனி, கனி கணவர் இயக்குனர் திரு, காதல் கோட்டை சூர்யா, kani husband director thiru, kadhal koattai movie surya

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனியின் கணவரும் இயக்குனருமான திரு, தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும்போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா?… காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் டைட்டில் வென்றவர் நடிகை கனி. இவருடைய கணவர்தான் இயக்குனர் திரு. இவர் நான் சிவப்பு மனிதன், தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதே போல, நடிகை கனியின் தந்தையும் முக்கியமான ஒரு இயக்குனர்தான். காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியன்தான் கனியின் தந்தை.

இந்த நிலையில், கனியின் கணவர் இயக்குனர் திரு, தனது ட்விட்டர் பக்கத்தில், “தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. Yes என்னோட Waller, After 2 weeks.. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. Thank you Mr G.Mohan #Humanity #மனிதம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் திரு தனது பர்சை தொலைத்துவிட்டுள்ளார். ஆனால், இரண்டு வாரத்துக்கு பிறகு பர்ஸில் இருந்த பான் கார்டு, ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் எவரோ முன் பின் அறியாத ஜி.மோகன் என்ற நபர் அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். அதை இயக்குனர் திரு புகைப்படத்துடன் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

கனியின் தந்தை அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்தார். அந்த படத்தில் தேவயாணியின் சான்றிதழ் தொலைந்துபோய்விட அஜித் அதை அஞ்சலில் அனுப்பி வைப்பார். இதனைக் குறிப்பிடும் விதமாக, திரு தொலைந்துபோன தனது வேலட்டுகளை அனுப்பி வைத்த அந்த முகம் தெரியாத நபரை காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali actress kanis husband director thiru tweets heart touching humanity post about kadhal koattai surya

Next Story
தாவணி முதல் சல்வார் வரை … ட்ரெஸ்ஸிங் வேரியேஷனுக்கு பவித்ராவை அடிச்சுக்க ஆளில்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com