அஸ்வின்- ஷிவாங்கி திருமண வீடியோ நிஜமா? உண்மை இதுதான்!

Ashwin and Shivangi clearify Tamil News : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அஸ்வின் சிவாங்கி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ashwin – Shivangi Marphing Marriage Video Tamil News : விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. சமையல் கலைஞர்களும் கோமாளிகளும் இணைந்து காமெடியில் கலக்கும் இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்து விரைவில் 3-வது சீசன் தொடங்கவுள்ளது. இதில் சமீபத்தில் நிறைவடைந்த 2-வது சீசனில் சமையல் கலைஞராக கலந்துகொண்டு 2-வது இடம் பிடித்தவர் அஸ்வின். இவரும் குக் வித் கோமாளியில் காமெடி மற்றும் சூப்பர் சிங்கரில் பாடல் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்த சிவாங்கியும் 2-வது சீசனில் நெருங்கி பழகியது அனைவரும்அறிந்த ஒன்று.

அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக இருவரும் எவ்வித விளக்கமும் கொடுக்காத நிலையில்,  நிகழ்ச்சி முடிவடைந்தும், இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகின்றனர். மேலும் குக் வித் கேமாளி நிகழ்ச்சியின் மூலம் பட வாய்ப்பு பெற்ற சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’, உதயநிதி நடிக்கும் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதே போல அஸ்வின் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அஸ்வின் – சிவாங்கி இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின் – சிவாங்கி இது முற்றிலும் தவறான தகவல் என்று தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்து இருவரும் அளித்துள்ள விளக்கத்தில்,

மார்ஃப் செய்யப்பட்ட சில வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை அனைத்தும் எனது பெயரை கெடுப்பதற்காக பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். எந்த ஒரு சக நடிகையையும் நான் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் கட்டத்தில இருக்கிறேன். என்னுடைய தற்போதைய கவனம் வேலையில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

தொடர்ந்து சிவாங்கி அளித்துள்ள விளக்கத்தில், என்னையும் என் சக நடிகர் ஒருவரையும் வைத்து மார்ஃப் செய்யப்பட்டு வைரலாகும் படங்கள் உண்மைக்கு புறம்பானவை. அது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali ashwin and shivangi clearify for marriage video

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express