Advertisment

காலாவாக மாறிய அஸ்வின்... ரஜினிக்கே போட்டியா?

Cook with comali Ashwin kaala getup new video on trending: சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஸ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா பட கெட்டப்பில் மிரட்டியுள்ளார்

author-image
WebDesk
Jun 26, 2021 17:09 IST
காலாவாக மாறிய அஸ்வின்... ரஜினிக்கே போட்டியா?

குக் வித் கோமாளி அஸ்வின்குமார், ரஜினி கெட்டப்பில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக விரைவிலே ஆரம்பிக்கப்பட்டது. அந்த சீசனும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மூன்றாவது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

குக் வித் கோமாளியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் அஸ்வின். இவர் சன் டிவியில் செல்லமே, குலதெய்வம், சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

publive-image

குக் வித் கோமாளியில் அஸ்வின் கலந்துக் கொண்டபோது எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். இவர் நன்றாக சமைப்பாரா என்று எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஒரு சில எபிஷோடுகளிலே தான் யார், தனக்கு என்ன திறமை இருக்கு என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்தினார் அஸ்வின். மேலும், அந்த சீசனில் மூன்றாம் பிடித்து அசத்தினார் அஸ்வின்.

தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் அஸ்வின், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஸ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா பட கெட்டப்பில் மிரட்டியுள்ளார். பெரும்பாலும் கோட்-சூட் போன்ற மார்டன் டிரஸில் காட்சியளிக்கும் அஸ்வின், இப்போது வேட்டி சட்டையில் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

அஸ்வின் தனது வீடியோவுடன், “எப்போதும் உங்கள் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Ashwin #Vijay Tv #Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment