குக் வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வின் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் இரண்டு சீசன்களிலும் கோமாளியாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளார்.
குக் வித் கோமாளியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டவர் அஸ்வின். இவர் இதற்கு முன் சீரியல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்திருந்தார். குக் வித் கோமாளியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். மேலும் காஜல் அகர்வால் நடித்த லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலும் அஸ்வின் நடித்துள்ளார்.
அஸ்வின் நடித்த ஆல்பம் பாடலான குட்டி பட்டாஸ் பாடல் யூடியூப்பில் அதிக பார்வைகளைக் கடந்து வருகிறது. அஸ்வின் சில திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.’என்ன சொல்ல போகிறாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/209081085_561928741638515_2905842375648725278_n1.jpg)
டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கவுள்ளார். காதல் மற்றும் காமெடியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக உள்ளது. புகழ் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கிறார்.
விவேக்- மெர்வின் இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.துரைராஜ் கலை இயக்குனராக பணியாற்றும் இந்த படத்தில், மதிவதனன் எடிட்டராக பணிபுரிகிறார்.
இந்த படத்தின் டைட்டிலை நடிகர் ஆர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி பிரபலங்கள் நடிக்கும் இந்த படத்தை ரசிகர் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். மற்ற நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil