Cook with Comali bala fun at Bharathi kannamma set: குக் வித் கோமாளி பாலா, பாரதி கண்ணம்மா சீரியலின் செட்டில் புகுந்து கலாட்டா செய்யும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. சீரியலில் முக்கிய நடிகர், நடிகைகள் மாற்றம் இருந்தாலும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு குறையவில்லை.
இதனிடையே விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 இந்த வாரம் முதல் ஒளிப்பரப்பாக உள்ளது. சமையல் நிகழ்ச்சியான இதில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் சீசனில் கோமாளிகள் மட்டும் கலாட்டா செய்ய, இரண்டாம் சீசனில் குக்குகளும் கலாட்டாவில் சேர்ந்துக் கொண்டனர்.
இதனால், இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பை அடுத்து, குறுகிய காலத்திலே சீசன் 3 தற்போது ஒளிப்பரப்பாக உள்ளது. இதையொட்டி குக் வித் கோமாளி டீம் பல ப்ரோமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த சீசனில் குக் வித் கோமாளி… எங்க சிரிக்காம சமாளி என்ற தீமில் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
Advertisment
Advertisements
இதன் ஒரு பகுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளில் ஒருவரான பாலா, பாரதி கண்ணம்மா சீரியலின் செட்டில் புகுந்து கலாட்டா செய்த நிகழ்வை விஜய் டிவி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா செட்டிற்கு செல்லும் அவர், கண்ணம்மா மற்றும் பாரதியை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இருவரையும் மாறி மாறி கலாய்த்து, அவர்களையும் சிரிக்க வைத்து நம்மையும் சிரிக்க வைக்கிறார்.
மேலும், பாரதியை பார்த்து குவாரண்டைன் குழந்தை என்றும் கண்ணம்மாவை பார்த்து சீரியஸூக்கு டிகிரி முடித்த ஆள் ஆயிற்றே, மோனோ ஆக்டிங்கில் முதல் பரிசு உங்களுக்கு தான் என்றும் கலாய்க்கும் பாலா, தொடர்ந்து அவர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். மேலும் அவர்களுக்கு சில டாஸ்க்குகளையும் கொடுக்கிறார் பாலா.
வாயில் தண்ணீர் வைத்தபடி பாரதி பாடும் பாடலை கண்டுபிடித்து கண்ணம்மாவும், வாயில் தண்ணீர் வைத்தபடி அந்த பாடலை பாட வேண்டும் என்ற டாஸ்க்கை இருவரும் சிறப்பாக செய்கின்றனர். மாற்றி மாற்றி பாலா கொடுத்த டாஸ்கை அவர்கள் உற்சாகத்துடன் செய்து முடிக்கின்றனர்.