New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/bala-10th-mark.jpg)
cook with comali bala was school topper his marks goes viral: பத்தாம் வகுப்பில் ஸ்கூல் டாப்பர் குக் வித் கோமாளி பாலா, சமூக வலைதளங்களில் வைரலாகும் அவர் பெற்ற மதிப்பெண்கள்
விஜய் டிவியில், தனது காமெடி பஞ்ச்களால் எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்துத் தள்ளும் பாலா, படிப்பிலும் செம கெட்டிக்காரர் என்பது உங்களுக்கு தெரியுமா?
விஜய் டிவியில் கலக்க போவது யாரு சீசன் 6ல் கலந்துக் கொண்டவர் பாலா. அவரது ஒல்லியான உடம்பால் எல்லோரின் கேலி கிண்டலுக்கு ஆளானவர், அதையே தனது பிள்ஸாக மாற்றிக்காட்டினார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் சில எபிஷோடுகளிலே வெளியேற வேண்டியவர், எப்படியோ தாக்குபிடித்து, தனது காமெடி பஞ்ச்களால் அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனார்.
பின்னர் விஜய் டிவியின் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்கள் இவர் இல்லாமல் நடக்காது. இவர் அடிக்கும் காமெடி பஞ்ச்களை எங்கிருந்து இவர் பிடிக்கிறார் என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். பாலா பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார். இரண்டு சீசன்களிலும் எலிமினேட் செய்யப்பட்டவர்களில் அதிகம் பேர் பாலாவுடன் ஜோடி சேர்ந்தவர்களே. ஆனால் அதையும் காமெடியாக மாற்றியது அவரது திறமை. மேலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, காக்டெய்ல் உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்துள்ளார்.
இப்படி நிகழ்ச்சிகளில் தரை லோக்கலாக கலாய்த்து தள்ளும் பாலா, சிறந்த படிப்பாளி என்றால் ஆச்சரியம் தானே. ஒரு ரியாலிட்டி ஷோவில் பாலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது குடும்பத்தினரையும் அழைத்து விஜய் டிவி மரியாதை செய்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாலாவின் குடும்பத்தினர், பாலா பள்ளியில் நன்றாக படிப்பவர் என்று கூறினர்.
இந்த நிலையில் பாலா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளிவந்துள்ளது. அவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அவர் படித்த பள்ளியில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். இதனை சிறப்பிக்கும் விதமாக அவரது பள்ளி நிர்வாகம் அப்போது பேனர் வைத்துள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.