/tamil-ie/media/media_files/uploads/2021/07/Pandian.jpg)
Cook With Comali Celebrity In Pandian Stores Serial : விஜய் டிவியின் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதிலும் ப்ரைம் டைம் சீரியலுக்காக ரசிகர்கள் நாள்தோறும் காத்திருக்கும் நிலையும் உள்ளது. அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவியின் இரவு நேர சீரியலான இதில், சகோதர பாசம், குடும்ப ஒற்றுமை என தற்போது காலத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடங்கியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சீரியல் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ரீமேக் செய்யப்ட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்த சம்பவங்களை பற்றி எடுத்து கூறுகிறது. இந்த குடும்பத்தின் 2-வது மருமகள் மீனாவுக்கு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது முதல் மருமகள் தனம் கர்ப்பமாக இருக்கிறது. வரும் எபிசோடுகளில் அவரின் வளைகாப்பு படலங்கள் அரங்கேற உள்ளன.
அதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் விழா நடக்கிறது. அதில் கெஸ்ட்டாக குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருக்கும் செஃப் தாமு வந்து பங்கேற்றுள்ளார். இதில் அவரது கேரக்டர் என்ன என்பது இதுவரை வெளியாகாத தகவலாக உள்ளது. சமீபத்தில் தனம் மற்றும் மீனாவாக நடித்து வரும் சுஜிதா, ஹேமா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படங்களிலும் செஃப் தாமும் பிண்ணனியில் அமர்ந்துகொண்டு இருக்கிறார். தற்போமு இந்தபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.