உன்னைவிட 10 மடங்கு டேஞ்சரான ஆளு நானு… பாபா பாஸ்கருடன் ‘வம்பு’ வனிதா

Vanitha Vijayakumar Cook With Comali Episode: சீசன் `1 போட்டியாளர்களுக்கும், சீசன் 2 போட்டியாளர்களுக்கும்  இடையே சமையல் போட்டி விறுவிறுப்பான சமையல் போட்டி நடக்க இருக்கிறது

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  உன்னைவிட 10 மடங்கு டேஞ்சரான ஆளு நானு என்று வனிதா வியகுமார் பாபா பாஸ்கருக்கு சவால் விடும் வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் `1 போட்டியாளர்களுக்கும், சீசன் 2 போட்டியாளர்களுக்கும்  இடையே சமையல் போட்டி விறுவிறுப்பான சமையல் போட்டி நடக்க இருக்கிறது.  எலிமினேஷன்  இல்லமால்  செலிப்ரேஷன் ரவுண்டாக இருக்கும் என்று விஜய் டிவி தனது வீடியோ ப்ரோமோவில் சுட்டிக் காட்டியது.

சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட  வனிதா விஜயன்காந்த, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா ஆகியோர் கலந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

வீடியோ ப்ரோமோவில், வனிதா விஜயகுமார் பாபா பாஸ்கரைப் பார்த்து, “உன்னைவிட 10 மடங்கு டேஞ்சரான ஆளு நானு” என்று சவால் விடுகிறார். இதற்கு பாபா பாஸ்கர் வழக்கம் போல், ” என்ன டேஞ்சர், நாங்கள் எல்லாம் வேற லெவல்” என்று பதிலளிக்கிறார்.

 


தென்னிந்திய சினிமாவில் பல திரைப்பட பாடல்களுக்கு நடன பயிற்சியாளராக பாபா பாஸ்கர் பணியாற்றியுள்ளார். சிங்கம் படத்தில் வரும் காதல் வந்தாலே பாடலுக்கும், வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் ‘What A Karuvadu’ பாடலுக்காகவும் சிறந்த  நடன இயக்குனர் விருதுகளை பெற்றார்.

மேலும், 2019ல் வெளிவந்த குப்பத்து ராஜா திரைப்படத்தை எழுதி, இயக்கினார். ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோர்  முன்னணி கதைப்பாத்திரத்தில் நடிப்பில் படம் திரைக்கு வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali episodes vanitha vijayakumar baba bhaskar funny videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com