/tamil-ie/media/media_files/uploads/2021/08/ashwin-kumar.jpg)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமார் ஒரு போஸ்டரைப் பார்த்து ஆடிப்போயுள்ளார். ஒரு நொடி பகீர்னு இதயமே நின்னு போச்சுங்க என்று தெரிவித்துள்ளார். அஸ்வின் அப்படி என்ன போஸ்டரைப் பார்த்து அதிர்ந்துப் போயிருப்பார் என்று தெரிந்துகொண்டபோது சுவாரஸ்யமாக இருந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அஸ்வின் குமார். அதிலும் குறிப்பாக நிறைய பெண்கள் இவருடைய ரசிகைகளாக மாறினார்கள். குக் வித் கோமாளி நிகழ்சிசியில் ரன்னர் அப்பாக வந்த அஸ்வினுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சினிமாவில் நுழைவதற்கு ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து 3 படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் அஸ்வினை ஒப்பந்தம் செய்துள்ளது.
ட்ரைடன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். என்ன சொல்லப் போகிறார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளியாக கலக்கிய புகழ் சேர்ந்து நடிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Ashwin-story.jpg)
அஸ்வின் சினிமா படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில், சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அப்படி அஸ்வின் சமூக ஊடகங்கலில் உலா வந்தபோதுதான், அஸ்வின் கைது என்ற ஒரு பிரேக்கிங் நியூஸ் போஸ்டரைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறார். பிறகு, அந்த போஸ்டரை முழுமையாகப் படித்த பிறகு நிதானத்துக்கு வந்த அஸ்வின் அந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் லோகோவை சேர்த்து சித்தரிக்கப்பட்ட அந்த போஸ்டரில், “நடிகர் அஸ்வின் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல பெண்களின் இதயத்தை திருடியதற்காக” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த போஸ்டரை முதலில் பார்த்ததும் பகீர் என்றான அஸ்வின், ஒரு நிமிடம் இதயமே நின்னு போச்சு என்று குறிப்பிட்டு அந்த போஸ்டரை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.