scorecardresearch

பரியேறும் பெருமாள் நடிகருடன் பவித்ரா லட்சுமி: அடுத்தடுத்து சினிமா சான்ஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிர் உடன் ஒரு ரோமாண்ட்டிக் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

cook with comali fame pavithra lakshmi, pavithra lakshmi joins with actor Kathir, குக் வித் கோமாளி, நடிகை பவித்ரா லட்சுமி, கதிர், பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர், பவித்ரா லட்சுமி, pavithra lakshmi actes new romantic movie, actress pavithra lakshmi, actor kathir, pariyerum perumala hero

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் நடிகை பவித்ரா லட்சுமி பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிர் உடன் ஒரு ரோமாண்ட்டிக் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்சியின் பெயரில் மட்டும்தான் கோமாளி இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களாக வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் 1 டைட்டிலை வென்ற வனிதா விஜயகுமார், சினிமாவில் மீண்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இரண்டாவது சீசனில் இரண்டாவது ரன்னர் அப்-ஆக வந்த அஸ்வின் அடுத்தடுத்து 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆஸ்தான கோமாளி பெர்ஃபார்மர் புகழ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷிவாங்கிக்கும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வரிசையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை பவித்ரா லட்சுமி ஏற்கேனவே நடிகர் சதீஷ் உடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிர் உடன் ஒரு ரோமாண்டிக் படத்தில் ஹீரோயினாக நடிக்க இணைந்துள்ளார். அடிப்படையில் டான்ஸரான பவித்ரா லட்சுமி ஏற்கெனவே மலையாள சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமானார். இப்போது, நடிகர் கதிர் உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை புதிய இயக்குனர் ஒருவர் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali fame pavithra lakshmi joins with actor kathir in new romantic movie