scorecardresearch

‘இப்பலாம் ஒரே லவ் மூட்தான் போல’ பிரபலத்தின் கேள்விக்கு ஷிவாங்கி பதில்

நெட்டிசன்கள், ஆர்.ஜே. விஜய்யுடன் சேர்ந்துகொண்டு, ஆமாம், ஷிவாங்கி சமீப காலமாக ஒரே ரொமாண்டிக் பாடல்களைத்தான் வெளியிட்டு வருகிறார் என தெரிவித்து வருகின்றனர்.

cook with comali fame Sivaangi, sivaangi shares romantic songs continuously, sivaangi, super singer sivaangi, ஷிவாங்கி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஷிவாங்கி இப்பல்லாம் ஒரே லவ் மூட்தான் போல, விஜய் டிவி, vijay tv, sivaangi, sivaangki shares romantic songs, netizens comments

சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இப்போது அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக உள்ளதாக தெரிவித்துள்ள ஷிவாங்கி, சமூக ஊடகங்களில் ஒரே காதல் பாடல்களாக பதிவிட, இப்பலாம் ஒரே லவ் மூட்தான் போல என்று கேள்வி எழுப்பிய பிரபலத்துக்கு ஷிவாங்கி ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ஷிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ், அஸ்வின் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள் ஷிவாங்கியை ரசிகர்களிடம் மேலும் பிரபலமாக்கியது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு, ஷிவாங்கி சிவகார்த்திகேயனுட டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருந்தாலும் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். சமூக ஊடகங்களில் தொடர்ந்து பாடல்களைப் பாடி பதிவேற்றி வருகிறார்.

இந்த சூழலில்தான், ஷிவாங்கி ஒரு ரொமாண்டிக் பாடலைப் பாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். சமீப காலமாக, ஷிவாங்கி ரொமாண்டிக் பாடல்களாகத்தான் வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய் ஜாலியாக, “ஒரே லவ் மூட்தான் போலயே” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி, “அப்படிலாம் இல்லணே, பக்கத்து ரூம்ல இருந்துட்டு ஸ்டோரியா” என்று பதிலுக்கு கலாய்த்து இருக்கிறார்.

ஆனாலும், நெட்டிசன்கள், ஆர்.ஜே. விஜய்யுடன் சேர்ந்துகொண்டு, ஆமாம், ஷிவாங்கி சமீப காலமாக ஒரே ரொமாண்டிக் பாடல்களைத்தான் வெளியிட்டு வருகிறார் என தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali fame sivaangi shares romantic songs continuously

Best of Express