/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-160459-2025-09-03-16-05-20.jpg)
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமாகி பின்னர் கேரளாவில் விஜேவாக பணியாற்றி வந்தவர் தான் ஷாலின் சோயா. இதையடுத்து தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா மந்திரி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஷாலின் சோயா. அப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலின். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளிவந்த கண்ணகி படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் ஷாலின் சோயா.
கண்ணகி படத்தில் ஷாலின் சோயாவின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் கிடைத்தன. இதையடுத்து சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுத்த ஷாலின் சோயா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஒரு சில எபிசோடுகளிலேயே எலிமினேட் ஆன இவர் பின்னர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பைனலுக்கு சென்றார். ஆனால் அவருக்கு நான்காம் இடம்தான் கிடைத்தது.
ஷாலின் சோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தது டிடிஎப் வாசன் தான். வாசன் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக கேரளாவில் டேட்டிங் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.
அதன் பிறகு சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஷாலின் சோயா அது தற்போது நனவாகி இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். அதன் பிறகு இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு குக்கிங் ப்ரோகிராம்மை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு இன்டெர்வியூவில் அவரது காதல் வாழக்கையை பற்றி பேசியுள்ளார். "டிடிஎப் வாசன் ரொம்ப சின்ன பையன். நான் இப்போது அவரிடம் பேரசுவதில்லை. ஒரு முறை அவர் அம்மா எனக்கு கால் செய்து சாமி அவன் மலை எறிகிட்டே இருக்கிறான் என்று கூறினார். எனக்கு சிரிப்பு தான் வந்தது. நான் அவர் அம்மாவிடம் உங்க பையன் செய்ற வேலைக்கு யாருமே வாழ முடியாது என்று கூறிவிட்டேன்." என்று பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.