குக் வித் கோமாளி ஃபைனலை மிஸ் செய்த விஜே பார்வதி… என்ன காரணம்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதற்காக, நான் அங்கு தேவையின்றி ஒட்டிக்கொண்டு இருக்க அவசியம் கிடையாது.

Serial News in Tamil : யூடியூபில் மிகுந்த போராட்டங்களுக்குப் பின், பிரபலமடைந்தவர் வி.ஜே.பார்வதி. பல்வேறு கசப்பான அனுபவங்களையும் விமர்சனங்களையும் கடந்து, தற்போது திரைப்படத்தில் நடிக்கும் அளவுக்கு உயரம் தொட்டிருக்கிறார். திரைப்பட வாய்ப்புக்கு முன்னதாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’யின் இரண்டாவது சீசனில், கோமாளியாக வலம் வந்தார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில், சில எபிசோடுகளை மட்டுமே கோமாளியாக அலங்கரித்த வி.ஜே.பார்வதி, அதன் பிறகாக நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதி கட்டமான கிராண்ட் ஃபினாலே அன்றாவது வந்திருக்கலாமே என, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப, அதற்கு பார்வதி பதிலளித்துள்ளார்.

திரைப்பட வாய்ப்பு கிடைத்ததால், குக் வித் கோமாளி ஷோவிற்கு தன்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக ஜோக்குகளையும் கவுண்டர்களையும் அடிக்க நான் டிவி பிரபலம் கிடையாது. நான் விரும்புவது வேறு. நான் யோசிக்கும் விதமும் சற்றே வித்தியாசமானது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதற்காக, நான் அங்கு தேவையின்றி ஒட்டிக்கொண்டு இருக்க அவசியம் கிடையாது. இருப்பினும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகம் முழுவதும் நல்ல வெற்றி பெற நான் விரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali grand final rj parvathi missing fans reaction reply insta story

Next Story
விமர்சன சிந்தனையையும் சமூக மாற்றத்தையும் ஊக்குவித்த நகைச்சுவை கலைஞன் விவேக்actor Vivek passes away, actor vivek death, vivek comedy actor, tamil cinema comedy actor, நடிகர் விவேக், விவேக் மறைவு, விவேக்கின் புகழ், தமிழ் சினிம, நகைச்சுவை நடிகர் விவேக், vivek promoted critical thinking social change, vivek special articles, vivek social activities
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express