இவங்க ரெண்டு பேரும் அக்கா – தங்கச்சி தானே… அப்புறம் ஏன் வித்தியாசமா இருக்காங்க?

“நாம ரெண்டு பேரும் அக்கா- தங்கச்சி தானே… பிறகு ஏன் வித்தியாசமா இருக்கிறோம்” என்று கேட்ட தனது தங்கை நிரஞ்சனியை குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, தனது தங்கையை ஜாலியாக கிண்டல் செய்து இன்ஸ்டா ரீல் செய்துள்ளார்.

cook with comali kani, cook with comali, cwc, cook with comali kani and survivor niranjani sisters, kani and niranjani sisters, kani instagram reel, kani video goes viral, குக் வித் கோமாளி கனி, குக் வித் கோமாளி, கனி, சர்வைவர் நிகழ்ச்சி நிரஞ்சனி, குக் வித் கோமாளி கனி கனி சர்வைவர் நிரஞ்சனி அக்கா தங்கை, zee tamil survivor niranjani, survivor, kani niranjani sisters

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி தனது தங்கையும் ஜீ தமிழ் டிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நிரஞ்சனியும் அக்கா தங்கைகள். ஆனால், பிறகு ஏன் நம் வித்தியாசமாக இருக்கிறோம் என்று தங்கை கேட்ட கேள்விக்கு கனி செம ஷாக் ஆன பதில் சொல்லி தங்கையின் வாயை அடைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் கனி. இவர் நடிகர் அகத்தியனின் மகளாவார். அது மட்டுமல்ல இயக்குனர் திரு தான் கனியின் கணவர். இயக்குனர் அகத்தியனின் மற்றொரு மகள் நிரஞ்சனி.

கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி டைட்டிலை வென்றார் என்றால், அவருடைய தங்கை நிரஞ்சனி அகத்தியன், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். ரசிகர்கள் பலரும் நிரஞ்சனி குக் வித் கோமாளியின் தங்கையா என்று வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், கனி, தனது தங்கையுடன் சேர்ந்து செய்த இன்ஸ்டா ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது தங்கை நாம் இருவரும் அக்கா தங்கைதானே அப்புறம் ஏன் வித்தியாசமாக இருக்கிறோம் என்று கேட்க அதற்கு கனி, உன்னை குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து வளர்த்தார்கள் என நகைச்சுவையாக சொல்லி கிண்டல் செய்துள்ளார்.

பொதுவாக, வீடுகளில் அண்ணன்கள், அக்காக்களுக்கும் தம்பிகள், தங்கைகளுக்கும் இடையே சிறிய வயதில், சின்ன சின்ன சண்டை வரும்போது, தங்களின் தம்பி தங்கைகளிடம் உன்னை தவிட்டுக்கு வாங்கி வந்து வளர்க்கிறோம் என்று சொல்லி ஜாலியாக கிண்டல் செய்வார்கள். அந்த மாதிரி, கனி தனது தங்கை நிரஞ்சனியை ஜாலியாக கிண்டல் செய்து இன்ஸ்டா ரீல் செய்துள்ளார்.

அந்த வீடியோவில், நிரஞ்சனி, “நம்ம ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிதான, ஆனால், ஏன் இவ்வளவு வித்தியாசமா இருக்கோம்” என்று கேட்கிறார். அதற்கு கனி, “நான் சின்ன வயசுல தங்கச்சி பாப்பா வேணும் வேணும்ணு அழுதுகிட்டே இருப்பேனாம், அதுதான் நான் அழக்கூடாதுணு சொல்லிட்டு, உன்னை குப்பைத் தொட்டியிலிருந்து தூக்கிட்டு வந்துட்டாங்களாம்” என்று கூறுகிறார். இதைக் கேட்டு நிரஞ்சனி ஷாக் ஆகிறார். இந்த ஜாலியான வீடியோ ரசிகர்களை ஈர்த்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali kani and survivor niranjani sisters instagram reel goes viral

Next Story
Tamil Serial Rating : நாடகம் தான் தெரியும் இருந்தாலும் கஷ்டமா இருக்கு… பாவம் கண்ணன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com