விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சீசன் 2 செம ஹிட் ஆனது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் இருந்தனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. வாரம் வாரம் ரசிர்களை சிரிக்க வைத்த ஷோ கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. கனி இதில் வெற்றி பெற்றார். இந்த ஷோவில் கலந்துகொண்ட பிறகு பலரது இமேஜ் மாறியுள்ளது. ஷகிலா, அஸ்வின் சமைத்து அசத்தும் விதமும் கோமாளிகளோடு செய்யும் ரகளையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Advertisment
இந்த ஷோவில் கலந்துகொண்ட பலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புகழ், பவித்ரா, சிவாங்கி , அஸ்வின் ஆகியோர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் குக்வித் கோமாளி குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் சமீபத்தில் வெளியான புரோமோவில் கனி யதார்த்தமாக கூறிய வார்த்தைகளுக்கு பாபா பாஸ்கர் கோபப்படுவது போல காட்டப்படுகிறது. இதனால் அஸ்வின், செப் வெங்கட், மதுரை முத்து என அங்கிருந்தவர்கள் ரொம்ப சீரிஸாக உள்ளனர். எனினும் இருவரும் ரொம்ப ஜாலியான கேரக்டர் என்பதால் இது நிச்சயம் பிராங்க் தான் என ரசிர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.