Advertisment

கழுத்தில் தாலியை துறந்த கனி... அப்புறம் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க!

Cook with comali Kani explains about thali video goes viral: தாலி குறித்து புது விளக்கம் கொடுத்த குக் வித் கோமாளி கனி; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

author-image
WebDesk
Aug 02, 2021 19:38 IST
கழுத்தில் தாலியை துறந்த கனி... அப்புறம் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க!

குக் வித் கோமாளி கனி இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாலி பற்றி கேட்ட ரசிகருக்கு அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

குக் வித் கோமாளி சீசன் 2 இன் டைட்டில் வின்னரான கனி, இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் தாலியை காணவில்லையே என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கனி, என்னோட புருஷன் கட்டின தாலியை பத்திரமா உயிர் போல பாதுகாத்து வருகிறேன். ஆனால் அவர் கட்டாத தாலியை நான் எதற்காக போட வேண்டும் என்று கழற்றி வைத்து இருக்கிறேன் என ரசிகர்களை குழப்பியுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக அறிமுகமானார் கனி. பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானார். நிகழ்ச்சியில் கனியின் சமையல் திறமையினைப் பார்த்த் ரசிகர்கள் அவரது யூடியூப் சேனலுக்கும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.

publive-image

இந்த நிலையில் கனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். வீடியோவைப் ரசிகர்கள் அழகாக புடவை கட்டி இருக்கிறீர்கள். ஆனால் கழுத்தில் மட்டும் ஏன் தாலி போடவில்லை என்று கேட்டிருந்தனர். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் அவருடைய யூடியூப் சேனலிலும் இதே கேள்வியை பலரும் கேட்டிருந்தனர். அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் லைவில் பேசியிருந்தார் கனி. அதில் தாலி அணிவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லை அது இடையில் தான் வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் எனக்கு தெரிந்து மாலை மாற்றி இவன் தான் எனக்கு இவள் எனக்கு என்று மனதார ஏற்றுக் கொண்டாலே போதும் என்று கூறியிருந்தார்.

மேலும், எனக்கு மஞ்சள் கயிற்றில் தாலி போடுவது தான் ரொம்பவும் பிடிக்கும். அதை எனது கணவர் எனக்கு கட்டினார். ஆனால் அதற்கு பிறகு தாலி மாற்றுவதற்காக உறவினர்கள் எல்லாம் அதை மாற்றி விட்டு வேறு தாலியை போட்டு விட்டனர். அது எனக்கு பிடிக்கவில்லை . என் கணவர் கட்டாத தாலியை எதுக்கு கழுத்தில் போட்டு கிட்டு என்று கழற்றி வைத்திருக்கிறேன். ஆனால் என் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்து என் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வருகிறேன் என்று காதல் பொங்க கூறியிருக்கிறார். மேலும், எனக்கு புகைப்படங்கள் எடுக்கும் போது மட்டும் அந்த தாலியை போட்டுக்கிட்டு மத்த நேரத்தில் அதை கழற்றி வைத்துவிட்டு இருக்கிறது பிடிக்கவில்லை. அதனால் தான் நான் எப்போதுமே போடவில்லை என்று தன்னுடைய விளக்கத்தை கூறியிருக்கிறார்.

publive-image

கனியின் இந்த விளக்கத்தை கேட்ட ரசிகர்களில் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாலி குறித்து இப்படி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போடாம இருங்க அத விட்டுட்டு இப்படி இது கலாச்சாரமே இல்லை என்று கூறுவது முறையல்ல என்று கூறிவருகின்றனர்.

ஆனால் கனியை ஆதரிக்கும் ரசிகர்களோ அவர் தவறாக எதுவும் கூறவில்லை. மனதில் பட்டதை பேசியுள்ளார். என பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தாலி செண்டிமெண்ட் பெரிய அளவில் மதிக்கப்படும் ஒன்று, இந்த நிலையில் கனியின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவும், இது குறித்த பேச்சும் தான் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Kani #Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment