Advertisment

மினி லைப்ரரி நடத்தும் கனி... வெற்றி ரகசியம் இதுதானா?

Cook With Comali Kani Tamil News : குக் வித் கோமாளி சாம்பியன் கனி தனது வீட்டில் உள்ள புத்தங்கங்கள் குறித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Jun 29, 2021 11:44 IST
New Update
மினி லைப்ரரி நடத்தும் கனி... வெற்றி ரகசியம் இதுதானா?

Cook With Comali Kani Home Library : ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் அதிக ரசிகர்களை பெற்ற ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிரப்பாகி வரும் இந்த ஷோ இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய 2-வது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்டனர்.



அதே போல போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்துகொண்ட நிலையில், பவித்ரா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகீலா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பிரபல இயக்குனர் கதியனின் மகளான கனி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.  



இதனையடுத்து நாள்தோறும் இவர் குறித்து செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன. மேலும், தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு இவரின் கனவர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள்களை அறிமுகம் செய்த கனி, அதனைத் தொடர்ந்து தற்போது தனது வீட்டில் உள்ள புத்தகங்கள் குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவருக்கு பின்னணியில் ஏராளமான புத்தகங்கள் உள்ளது. இதை பார்க்கும்போது ஒரு மினி நூலகம் போன்று காட்சி அளிக்கிறது. இந்த புத்தகத்தை எல்லாம் படித்து தான் சமையலில் டைட்டிலை அடித்தாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Kani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment