scorecardresearch

மளமளவென வளர்ந்த 2 மகள்களுடன் காரக்குழம்பு கனி: இப்படி ஜோடியா பார்க்க எவ்ளோ அழகா இருக்கு!

Cook with comali Kani with her daughters photo goes viral: கனி தனது மகள்களுடன், தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எல்லோரும் லைக் செய்து வருகின்றனர்.

மளமளவென வளர்ந்த 2 மகள்களுடன் காரக்குழம்பு கனி: இப்படி ஜோடியா பார்க்க எவ்ளோ அழகா இருக்கு!

அம்மாவும் மகள்களும் இணைந்தாலே மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது அந்த மகிழ்ச்சி மிக அழகானதும் கூட… அப்படியொரு அம்மா மகள் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்பதை தற்போது பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் கனி. தென்னிந்தியா சமையல் மட்டுமல்லாது, மேற்கத்திய உணவுகளை செய்வதிலும் கைத்தேர்ந்தவர். நிகழ்ச்சியில் இவர் செய்த காரக் குழம்பின் சுவையும், தமிழ் பாரம்பரிய உணவுகளை அதிகமாக செய்ததும் இவருக்கு காரக்குழம்பு கனி என பெயர் வாங்கி தந்தது. பைனலில் கூட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் உள்ள எல்லோரையும் வாழ்த்திய பின், கனியை கூப்பிட்டு பைனலிலும் காரக்குழம்பு தானா என கிண்டல் செய்திருப்பார்.

காதல் கோட்டை பட இயக்குனர் அகத்தியனின் மகளான கனி, பிரபல திரைப்பட இயக்குனர் திரு என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கனி நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமையல் குறிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கனி தனது மகள்களுடன், தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எல்லோரும் லைக் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali kani with her daughter photo goes viral