விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். முதல் முதலில் 2019-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் ஆதரவு பெற்று அடுத்தடுத்த சீசன்களாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை 2 தினங்களுக்கு முன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், எல்லாவிற்றிலும் மேலானது சுய மரியாதை. இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் நிறைய குறுக்கிடுகிறார் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
மணிமேகலை குறிப்பிடுவது தொகுப்பாளரும், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவை தான் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், பிரியங்காவின் நெருங்கிய தோழராக அறியப்படும் மா..கா.பா ஆனந்த்திடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர், "நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. அதனால் எனக்கு அங்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலவரம் தெரியாது. அதனால் நான் இவருக்கு தான் சப்போர்ட் என்று சொல்ல முடியாது. நாம் ஒரு காட்டுக்குள் ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நாம போய் அதில் தடுக்க முடியாது.
அப்படி தடுத்தால் நமக்கே பிரச்சனையாகும். அந்த யானைகள் நம்மை தூக்கிப்போட்டு கொன்றுவிடும். அதுபோல பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே போனது அவருடைய கருத்து. அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“