/tamil-ie/media/media_files/uploads/2021/03/Pav2.png)
Cooku with Comali viral Pavithra Lakshmi
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தது குக் குவித் கோமாளி நிகழ்ச்சிதான்.அதிலும் சீசன் 2 செம ஹிட் ஆனது.தற்போது அந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் பவித்ரா லட்சுமி மாடலிங்கில் அதிகம் பணியாற்றி வந்துள்ளார்.சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியில் புகழ் பவித்ரா ஜோடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தற்போது அவருக்கு பெரிய பட தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் தான் பவித்ரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு அஜீஷ் அசோக் இசையமைக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தில் பணியாற்ற இருகின்றனர். சமீபத்தில் இந்த புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவை ததும்ப கதை இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.நகைச்சுவை நடிகர் சதீஷ் இந்தபடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது சமூகவலைதளத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் பவித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#AgsEntertainment is happy to announce our next film @Ags_production #21
— Archana Kalpathi (@archanakalpathi) April 7, 2021
#KalpathiAghoram#KalpathiGanesh#KalpathiSuresh@aishkalpathi@actorsathish@itspavitralaksh@KishoreRajkumar@venkat_manickam@ajesh_ashok@praveenzaiyan@Ram_Pandian_90#MGMurugan@onlynikilpic.twitter.com/oiGMRS7NSD
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.