New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Pavithra-lakshmi.jpg)
Cook With Comali : நல்ல டான்சரான பவித்ர லட்சுமி சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இப்படி குத்தாட்டம் போடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
Cook With Comali Pavithra Lakshmi Viral Video : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெறற பவித்ரா லட்சுமி நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கும், அந்த ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதில் ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் ரசிக்கும் ரசிகர்கள் பட்டாளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம ஏராளம். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று இன்று ஒளிபரப்பாகி வருகிறது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் 5 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.கனி, அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர், ஷகீலா ஆகியோர் பங்கேற்கும் இந்த இறுதிச்சுற்றில், ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனால் இவர்கள் 5 பேருக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் புகழ் பெற்றவர் பவித்ரா லட்சுமி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ள பவித்ர லட்சுமி தனது மகிழ்ச்சியை வெளிய்ப்படுத்தும் விதாமாக நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது பவித்ர லட்சுமி யார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்த போது 2020 ல் எடுக்கப்பட்ட வீடியோ என கூறப்படுகிறது.
நல்ல டான்சரான பவித்ர லட்சுமி சில விளம்பரங்களிலும் நடித்துள்ள நிலையில் நடு ரோட்டில் இப்படி குத்தாட்டம் போட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.