scorecardresearch

ஒரு கேப்ஷன் போட்டது குத்தமாய்யா? பவித்ராவை அலேக்காக தூக்கிய ரசிகர்கள்!

Cook with comali pavithra photo caption got trolls and memes: பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘டேக் மீ அப்’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார். இந்த கேப்ஷனை கலாயக்கும் விதமாக, பவித்ராவை மேலே தூக்கும் விதமாக, விதவிதமான மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே விஜய் டிவி தான் என்பது போல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே பெரிய ஹிட் தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படியான ரியாலிட்டி ஷோக்களில் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்த குறைந்த இடைவெளியிலே அடுத்த சீசன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் சீசனில் குக்குகளாக எல்லோருக்கும் அறிமுகமானவர்களே வந்தனர். ஆனால் இரண்டாவது சீசனில் பெரிய அறிமுகங்கள் இல்லாத நிறைய பேர் கலந்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் பவித்ரா லெட்சுமி. பவித்ரா இதற்கு முன் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டிருந்தாலும், அவருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது குக் வித் கோமாளி தான்.

நிகழ்ச்சியில் பவித்ரா மற்றும் புகழின் காம்பினேஷன் இந்த சீசனின் வெற்றிக்கு பெரிய பங்கு வகித்தது. பவித்ராவுடன் புகழ் அடிக்கும் கூத்துகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி மூலம், பவித்ரா நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

பவித்ரா ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்தார். பின்னர் மலையாளத்தில் வெளியான உல்லாசம் படத்தில் நடித்தார். பின்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதன்பின் கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

பவித்ராவை ரசிகர்கள் எல்லோரும் சமந்தா போல் இருப்பதாக கூறி வந்தனர். சில நாட்களுக்கு முன் தெறி பட சமந்தா போல் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வந்தனர். இந்த நிலையில், பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘டேக் மீ அப்’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார். இந்த கேப்ஷனை கலாயக்கும் விதமாக, பவித்ராவை மேலே தூக்கும் விதமாக, விதவிதமான மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகின்றனர். பாகுபலி பிரபாஸ் லிங்கத்தை தூக்குவது போலவும், ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தூக்குவது போலவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதனையடுத்து பவித்ரா தான் புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கேப்ஷன் திஸ் எனப் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali pavithra photo caption got trolls with memes