scorecardresearch

புகழ் புதிய சாதனை: பற்ற வைக்காத பாலா; லாபத்தில் பங்கு கேட்கும் பவித்ரா!

இந்த சாதனையை புகழுக்கு சர்பிரைஸ் அளிக்கும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் பங்கேற்ற நகைச்சுவை கலைஞர் பாலா, நடிகை பவித்ரா ஆகியோர் இணைந்து சர்பிரைசாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

cook with comali, pugazh celebrates 1 million youtube subscribers, cook with comali pugazh, குக் வித் கோமாளி, புகழ், குக் வித் கோமாளி புகழ், புகழ் யூடியுப் சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைப்பை தாண்டியது. பவித்ரா, பாலா, நடிகை பவித்ரா, pugazh celebrates with pavithra and bala, actress pavithra, cook with comali bala, பரட்டை புகழ், parattai pugazh, pugazh instagram

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கொடிகட்டிப் பறக்கும் புகழ் தற்போது ஒரு புதிய சாதனையும் செய்துள்ளார். அதை அவருடைய நண்பர்கள் பாலா, பவித்ரா கேக் வெட்டி கொண்டாடியதோடு லாபத்திலும் பங்கு கேட்டு ஜாலியாக கலாய்த்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில்தான் புகழ் பெண் வேடமிட்டு நகைச்சுவை கலைஞராக அறிமுகமானார். பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற புகழ் தனது காமெடி ரியாக்‌ஷன், நகைச்சுவை கவுண்ட்டர்களால் சினிமா நட்சத்திரங்களைவிட அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2 ஆகிய 2 நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்ற புகழ் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பலரும் புகழின் நகைச்சுவைக்காகவும் அவருடைய காமெடி ரியாக்‌ஷனுக்காகவும் பார்த்தவர்கள் நிறைய பேர்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான புகழ் தற்போது 16 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நகைச்சுவை கலைஞர் புகழ் டிவி, சினிமாவில் மட்டுமல்ல, தனது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராமிலும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களை பல ஆயிரக் கணக்கான ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்கின்றனர்.

இந்த சூழலில்தான், நகைச்சுவை கலைஞர் புகழின் யூடியூப் சேனலைசப்ஸ்கிரைப் செய்தவர்கள் 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டியுள்ளனர். அதே போல, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் 2 மில்லினைத் தாண்டியுள்ளனர். ஒரு நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி நடிகராக உயர்ந்துள்ள புகழுடைய யூடியூப் சேனல் 1 மில்லியன் பேர்களுக்கு மேல் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள் என்பது சாதனைதான்.

இந்த சாதனையை புகழுக்கு சர்பிரைஸ் அளிக்கும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் பங்கேற்ற நகைச்சுவை கலைஞர் பாலா, நடிகை பவித்ரா ஆகியோர் இணைந்து சர்பிரைசாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த வீடியோவில், வெளியே சென்று விட்டு தனது மகளுடன் வீட்டுக்கு வரும் புகழ் வீட்டுக்கு வெளியே இருந்து கதவைத் திறக்க, அங்கே நடிகை பவித்ரா வீட்டுக்கு உள்ளே இருந்து சர்பிரைஸ் என்று கதவைத் திறந்து சர்பிரைஸ் கொடுக்கிறார். பின்னர், பாலா, “புகழ் மாமாவ பத்தி சொல்லனும்னா, தனி ஆளா சென்னைக்கு வந்து இன்னைக்கு யூடியூப்ல 10 லட்சம் பேரையும் இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பேரையும் உன்னோட ஆதரவாளரா வைச்சிருக்கியே… இதை கொண்டாடனும்” என்கிறார். நடிகை பவித்ரா, புகழிடம் லாபத்திலும் பங்கு தருவியா என்று கேட்டு கலாய்த்துளார்.

அப்போது கேக் வெட்டி கொண்டாட கேக்கில் மெழுகு வத்தியை பத்த வைடா என்று அருகில் இருப்பவர் பாலாவிடம் சொல்ல கவுண்ட்டருக்கு பேர் போன, பாலா எனக்கு பத்த வைக்கிற பழக்கமே இல்லை என்று சிலேடையில் பேசி கலாய்க்கிறார். இந்த பார்ட்டியில், புகழ் கேக் வெட்டி நடிகை பவித்ரா, பாலா ஆகியோருக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்.

புகழின் யூடியுப் சேனல் சப்ஸ்கிரைபர் 1 மில்லியன் தாண்டியதை பாலா, பவித்ரா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை 6 லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்துள்ளனர். 60 ஆயிரங்களுக்கு மேல் லைக் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali pugazh celebrates 1 million youtube subscribers with pavithra and bala