Advertisment

ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட புகழ்… ’வேற லெவல்’ என கமெண்ட் செய்த பவித்ரா

Cook with comali pugazh gym photo goes viral: புகழின் உடல் அமைப்பைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குக் வித் கோமாளியில் புகழுடன் அடிக்கடி ஜோடி சேரும் பவித்ரா லக்‌ஷ்மி ‘வேற லெவல்’ என கமெண்ட் செய்துள்ளார்.

author-image
WebDesk
Jun 03, 2021 22:41 IST
ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட புகழ்… ’வேற லெவல்’ என கமெண்ட் செய்த பவித்ரா

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் விரைவில் வெளியேற்றப்பட்டாலும், அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு டீமுடன் இணைந்து காமெடி செய்து வந்தார். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலம் மிகப்பெரிய வெளிச்சத்திற்கு வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

தற்போது கொரோனா ஊரடங்கில் உணவின்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகிறார் புகழ். அவர் உணவு வழங்கும்  புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தன.



publive-image

அதோடு புகழ் தான் வீட்டில் செய்யும் சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். புகழ் தற்போது 90’s கிட்ஸ்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற சக்திமான் தொடரை மீண்டும் பார்த்து கொண்டிருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.



இந்நிலையில் தற்போது புகழ் ஜிம்மில் முன்பு உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "உலகம் உன் முயற்சியை கவனிக்காது.. முடிவுகளைத் தான் கவனிக்கும்! Missing my Gym" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் புகழின் உடல் அமைப்பைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குக் வித் கோமாளியில் புகழுடன் அடிக்கடி ஜோடி சேரும் பவித்ரா லக்‌ஷ்மி ‘வேற லெவல்’ என கமெண்ட் செய்துள்ளார்.



publive-image

விஜய் டிவி காமெடி நடிகர் பழைய ஜோக் தங்கதுரை 'படையப்பா ரஜினி மாதிரி இருக்கு' என கமெண்ட் செய்து உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிம்பு, புகழ் தான் என்னால் உடம்பை குறைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தான் என புகழை புகழ்ந்திருப்பார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Pavithra #Cook With Comali Pughal #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment