Cook with Comali Pugazh Pavithra Emotional Speech and Post Tamil News
Cook with Comali Pugazh Pavithra Emotional Speech : எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்திருந்தாலும், சமீபத்திய சென்சேஷனல் ஹிட் என்றால் அது 'குக் வித் கோமாளி'தான். முதல் சீசனில் கோமாளிகள் அதிக கவனம் ஈர்த்தாலும், இரண்டாவது சீசனில் கோமாளிகள், குக் மற்றும் நடுவர்கள் என அனைவருமே ஃபேவரைட்டுகளாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் சீசன்களில் கொஞ்சமும் சளைக்காமல் சுவாரசிய கன்டென்ட் கொடுப்பவர் புகழ்தான்.
Advertisment
Cook With Comali Pavithra Lakshmi
முதல் சீசனில் ரம்யா பாண்டியனோடும் இரண்டாம் சீசனில் பவித்ரா, தர்ஷா, சுனிதா என இவர்கள் மூவரோடும் இணைந்து கொடுக்கும் கன்டென்ட், டாப் ஹிட். இவர்களின் லவ் கெமிஸ்ட்ரியைவிட, ஷிவாங்கிக்கும் புகழுக்கும் இடையே இருக்கும் பாசமலர் போராட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பவித்ரா எலிமினேட் ஆனார். அப்போது பேசிய பவித்ரா, தனக்கு கிடைத்த புகழுக்கு காரணம் புகழ்தான் என்று கூறினார். மேலும், ஆரம்பத்தில் தன்னை யார் என்பதே மக்களுக்குத் தெரியாது என்றும், பிறகு குக் வித் கோமாளி வந்தபிறகு முதல் முறையாக நான் புகழுடன் சேர்ந்து சமைத்ததை அடுத்து ‘புகழுடன் சமைச்சவங்க இவங்க தான்’ எனப் பலரும் சொன்னார்கள். அதன்பிறகுதான், தனக்கு பவித்ரா என்ற பெயர் கிடைத்தது என்றும் கூறினார்.
Cook with Comali Pugazh
Advertisment
Advertisements
பவித்ராவின் இந்த ஸ்டேட்மென்ட்டை கட்டு கண்கலங்கிய புகழ், "யாரும் இப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க, அந்த நல்ல மனசுக்கே நீங்கள் நல்லா வருவீங்க’ என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனம் ஒன்று புகழுக்கு விருது ஒன்றை வழங்கியது. அதனைப் பெற்றுக்கொண்ட புகழ், "ஆரம்பத்தில் பெண் வேடம் போட்டதிலிருந்து, கூட இருந்த நண்பர்கள்கூட கொச்சையாகப் பேசினார்கள். ஆனால், அதனால் எனக்கு பெரிய பாதிப்பு எதுவுமில்லை. நான் இன்று இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் லேடி கெட்டப் தான். அதை இப்போதும் போட தயங்கமாட்டேன். வரும் காலங்களிலும் ஷேவிங் மெஷின் வைத்துக்கொண்டே தான் அலைவேன்" என்று உருக்கமாகக் கூறினார்.
புகழ் பேசிய இந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்த பவித்ரா, "நீ அப்போதும் ஹீரோ தான் டார்லிங். உன் கடின உழைப்பு உன்னை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்" என்று பதிவிட்டிருந்தார். பவித்ராவின் இத்தகைய போஸ்ட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil