Cook with comali Pugazh talks about his lover: குக் வித் கோமாளி புகழ், தனது காதலி குறித்து முதன்முறையாக அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் விரைவில் வெளியேறிவிட்டாலும்,விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’சிரிப்புடா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும் அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது, விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ’குக் வித் கோமாளி’ தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் அவருக்கு படவாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. இதையடுத்து புகழ் சந்தானத்துடன் சபாபதி, அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு, நிச்சயம் புகழ் வருவார் என சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
Advertisment
Advertisement
இதற்கிடையே ஒரு பெண்ணுடன் புகழ் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலானது. பின்னர் அந்த பெண் புகழின் காதலி என தெரியவந்தது.
இந்தநிலையில், இன்று ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து பேசியுள்ளார். அதில் "5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி, இந்த வருடம் திருமணம் செய்து கொள்வோம்" என புகழ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil